How To Make Animation Cartoon Movie In Mobile | தமிழ் பொம்மை படம் | Master Mind

Mobile இல் Animation திரைப்படம் உருவாக்குவது எப்படி



வணக்கம் நண்பர்களே! இன்றைய பதிவில் நாம் காணவிறுப்பது உங்களது கைபேசியை உபயோகித்து எவ்வாறு தத்ரூபமான சிறந்த அனிமேஷன் குறும்படங்களை உருவாக்குவது என்பதை பார்ப்போம்.

அனிமேஷன் திரைப்படம் உருவாக்குவதற்கு கணினி போன்ற கருவிகள் வேண்டும் என பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். 

ஆனால் தற்போது வளர்ந்திருக்கும் அறிவியல் டெக்னாலஜி மூலம் அந்த அனிமேஷன் திரைப்படங்களை தமது கைப்பேசியின் மூலம் உருவாக்க பல செயலிகளை உருவாக்கியுள்ளனர்.

அப்படி ஒரு அனிமேஷன் திரைப்படம் உருவாக்கும் செயலியை பற்றிதான் இந்த பதிவில் நாம் விரிவாகக் பார்க்கப் போகிறோம்.

இந்த செயலி கொண்டு உங்களால் சிறந்த முறையில் அனிமேஷன் கார்ட்டூன் திரைப்படங்களை உங்களது மொபைல் மூலம் உருவாக்கிக் கொள்ள முடியும்.

இந்த செயலியில் வெறும் அனமேஷன் மட்டுமல்லாது இதில் அந்த அணிமேஷன் திரைப்படங்களுக்கு அதில் உருவாகும் அனிமேஷன் கதாபாத்திரங்களுக்கு உயிர் ஊட்டும் வகையில், இந்த கதாபாத்திரங்களுக்கு உங்கள் குரல்் கொண்டு குரல் கொடுக்க முடியும்.

அப்படி ஒரு கணினியில் உருவாக்கும் அளவிலான தரமான அனிமேஷன் திரைப்படங்களை உருவாக்க உதவும் ஒரு செயலியை பற்றியே இந்த பதிவில் காணவிருக்கிறோம்.

Plotogon App:

இன்று இந்த பதிவில் நாம் காணவிருக்கும் செயலியின் பெயர் Plotogon.

இந்த Plotogon செயலி உங்களுக்கு Google Playstore இல் உள்ளது, எனவே உங்களது மொபைலில் இதை பதிவிறக்கம் செய்ய வேண்டுமெனில் Google Playstore சென்று அதில் Plotogon என்று பதிவு செய்து தேடினால் உங்களுக்கு இந்த செயலி கிடைக்கும் அதனை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து சிறந்த வகையிலான அணிமேஷன் திரைப்படங்களை உங்களால் உருவாக்கிக்கள்ள முடியும்.

Features in Plotogon App:
  • Characters
  • Character Accessories
  • Different Background
  • Different Scenes
  • Voice-over
  • Voice Editing
  • Scenes Animation and Transition

இந்த Plotogon செயலியின் மூலம் நீங்கள் உங்களுக்கு விருப்பமான அனிமேஷன் கார்ட்டூன் கதாபாத்திரத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். 

நீங்கள் உங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்கு முக அமைப்பு கொடுத்து புது கதாபாத்திரங்களை உருவாக்கி கொள்ள முடியும்.

நீங்கள் கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்க விரும்பவில்லை எனில், இந்த செயலியில் சில கார்ட்டூன் கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த கார்ட்டூன் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து உங்களது அனிமேஷன் திரைப்படங்களை உருவாக்கி கொள்ள முடியும்.

இந்த Plotogon செயலியில் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த கார்ட்டூன் கதாபாத்திரங்களை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் (Edit) கொள்ளவும் முடியும்.

அந்த கதாபாத்திரத்துக்கு உகந்த நிறம், உடை மற்றும் அலங்காரங்களை நீங்கள் உங்களுக்கு பிடித்தவாறு உருவாக்கிக் கொள்ள முடியும்.

இந்த Plotogon செயலியில் அந்த கார்ட்டூன் கதாபாத்திரங்களை அலங்கரிக்கும் வகையில் உங்களுக்கு பல உடைகள் அலங்காரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த உடை அலங்காரங்கள் கொண்டு நீங்கள் அந்த கதாபாத்திரங்களை உங்களுக்கு ஏற்றவாறு உருவாக்கிக்கொள்ள முடியும்.

மேலும் அந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு குரல் அமைப்பும் நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.

உங்களது குரல் ஒளியின் மூலம் அந்த அனிமேஷன் கதாபாத்திரத்திற்கு Voice-over கொடுக்க முடியும். அந்தக் குரலைை உங்களுக்கு வேண்டிய வகையில் Edit செய்து கொள்ள முடியும்.

மேலும் நீங்கள் உருவாக்கும் அணிமேஷன் திரைப்படங்களுக்கு ஏற்றவாறு பல இடங்கள் (Background) இந்த செயலியில் default ஆக கொடுக்கப்பட்டிருக்கும் அதனை தேர்வு செய்து உங்கள் அனிமேஷன் திரைப்படம் உருவாக்கிக் கொள்ள முடியும்.

இந்த Plotogon செயலியில் உங்களால் Multiple Scenes உருவாக்கிக் கொள்ள முடியும் அந்த ஒவ்வொரு Scences இக்கும் ஏற்றவாறு ஒவ்வொரு இடங்களும் (Background) தேர்ந்தெடுக்க முடியும்

உங்களுக்கு இந்த செயலியில் பல இடங்கள், கதாபாத்திரங்கள், அந்த கதாபாத்திரங்களுக்கு உகந்த ஆடை அலங்காரங்கள் இலவசமாக கொடுக்கப்பட்டிருக்கும்.

அதில் இலவசமாக இருப்பவை போதாது எனில் நீங்கள் பணம் கொடுத்து மேலும் பல கதாபாத்திரங்கள், இடங்கள், ஆடை அலங்காரங்கள் அனைத்தும் வாங்கிக்கொள்ள முடியும்.

இந்த Plotogon செயலி மூலம் உருவாக்கப்படும் அணிமேஷன் கார்ட்டூன் திரைப்படங்களில் இந்த Plotogon செயலியின் Watermark இருக்கும்.

Watermark இல்லாமல் அந்த அனமேஷன் திரைப்படங்களை நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாள், அதற்கு நீங்கள் இந்த செயலியில் பணம் கொடுத்து Premium membership பெற வேண்டும்.

இல்லை Watermark இருந்தால் பரவாயில்லை என்று நினைத்தாள் பணம் இல்லாமல் இலவசமாக உங்களால் இதில் அனிமேஷன் கார்ட்டூன் திரைப்படங்களை உருவாக்கி கொள்ள முடியும்.

அப்படி உருவாக்கிய அனிமேஷன் கார்ட்டூன் திரைப்படங்களை உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் முடியும் இந்த செயலியில் இருக்கும் Community Tab இல் பல பார்க்கும் வகையில் பகிரவும் முடியும்.

இந்த அனிமேஷன் திரைப்படம் உருவாக்கும் செயலி பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தில் செல்லவும்.




இந்த செயலி மூலம் எவ்வாறு அனமேஷன் திரைப்படம் உருவாக்குவது என்பதை அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள YouTube வீடியோவை பார்க்கவும்.


YOUTUBE VIDEO








Previous Post
Next Post