Top 5 Amazing Websites | free call | Facebook account count | Copyright Images | Flight Radar | Master Mind

நீங்கள் அறிந்திராத 5 அட்டகாசமான இணையதள பக்கங்கள்


வணக்கம் நண்பர்களே! இன்றைய பதிவில் நாம் காணவிருப்பது, நீங்கள் அறிந்திராத இதுவரை கேள்விப்படாத ஆனால் உங்களுக்கு பெரிதும் உபயோகமாக இருக்கும் 5 இணைய தளங்களைப் பற்றிய பதிவே இது.

இந்தப்பதிவில் உள்ள இணைய தளங்களைப் பற்றி பார்ப்பதற்கு முன்பு நமது YouTube Channel இல் இதுபோன்ற வேறு 5 இணைய தளங்களைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்.அந்தக் காணொளியை கீழே இணைத்துள்ளேன் அதனை பார்க்கவும்.

Youtube Video


தற்போது வாருங்கள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அந்த ஐந்து இணையதள பக்கங்கள் என்னவென்பதை பார்ப்போம்.

1. The Face of Facebook

நாம் முதலாவதாக பார்க்கும் இந்த இணையதளத்தின் மூலம் பேஸ்புக் கணக்கில் இதுவரை எத்தனை பேர் இணைந்துள்ளனர் என்பதை அறிய முடியும்.

அதுமட்டுமில்லாமல் பேஸ்புக் கணக்கில் இணைந்துள்ள அனைவரின் Profile Picture அந்த இணைய பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களது ஃபேஸ்புக் Profile Picture இந்த இணைய பக்கத்தில் இருக்கும்.

உங்களது பேஸ்புக் பக்கத்தின் Profile Picture உம் அந்த பேஸ்புக் கணக்கில் எத்தனாவது இடத்தில் இருக்கிறீர்கள் என்பதும் அந்த இணைய பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்.

The Face Of Facebook இனிய பக்கத்துக்குச் செல்ல கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தை Click செய்யவும்.



2. Pastebin.com

இந்த Pastebin இணையதளத்தை பயன்படுத்தி உங்களுடைய எந்த ஒரு செய்தியையும் மற்றவர் எவரும் அறியாதவாறு ரகசியமாக உங்கள் நண்பர்களுக்கு அனுப்ப முடியும்.

நீங்கள் அனுப்பும் செய்தி எவ்வளவு நேரம் உங்கள் நண்பர் பார்க்க வேண்டும் எனும் கால அளவு நீங்கள் இந்த இணையதளம் மூலம் உருவாக்கிக் கொள்ள முடியும். நீங்கள் உருவாக்கும் கால அளவு தாண்டிய பிறகு அந்த செய்தி தானாக முழுமையாக அழிந்துவிடும். அதன் பிறகு அந்த செய்தியை எவராலும் காண இயலாது. 

இதுபோன்று மற்றவர் எவரும் அறியாதவாறு இரகசியமாக நீங்கள் அனுப்ப விரும்பும் செய்திகளை உங்கள் நண்பர்களுக்கு பகிரவேண்டும் என்று விரும்பினால் இந்த இணையதள பக்கத்தில் மூலம் நீங்கள் அந்த செய்தியை பகிரலாம்.

இந்த Pastbin இணையப் பக்கத்துக்குச் செல்ல கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தை Click செய்யவும்.


3. Corrupt-a-file.net

இந்த corrupt-a-file.net இணைய பக்கத்தின் மூலம் உங்களுடைய எந்த ஒரு File லையும் உங்களால் Corrupt செய்து கொள்ள முடியும்.

அப்படி Corrupt செய்த அந்த File ஐ எவர் Open செய்தாலும் This file is corrupted என்று தான் அவருக்கு வரும்.

எனவே இந்த இணையதள பக்கத்தின் மூலம் உங்கள் நண்பர்களுடன் நீங்கள் பகிர விரும்பும் செய்தியை Corrupt செய்து பகிர்ந்து உங்கள் நண்பர்களை ஏமாற்றலாம்.

இணைய பக்கத்துக்குச் செல்ல கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தை Click செய்யவும்.


4. Pexels.com

இந்த pexels இணையப்பக்கத்தில் பலவகையான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் YouTuber எனில் உங்கள் வீடியோவுக்கு தேவைப்படும் காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் நீங்கள் இந்த இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொண்டு உங்கள் YouTube வீடியோவில் உபயோகித்துக் கொள்ள முடியும்.

இந்த இணையப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து புகைப்படங்களும் உங்களுக்கு இலவசமாக கொடுக்கப்படும் புகைப்படங்கள் மேலும் இந்த புகைப்படங்கள் அனைத்தும் உங்களுக்கு Copyright இல்லாத புகைப்படங்கள்.

எனவே இந்த இணைய பக்கத்தில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உங்கள் வீடியோக்களில் எந்த ஒரு Copyright விதிகளும் இல்லாமல் உபயோகித்துக்கொள்ளலாம்.

இணைய பக்கத்திற்கு செல்ல கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தை Click செய்யவும்.


5. Flight Radar24

இந்த Flight Radar24 இனிய பக்கத்தின் மூலம் உங்கள் பகுதியில் இப்பொழுது எவ்வளவு விமானங்கள் பறந்து கொண்டிருக்கின்றன என்பனவற்றை  அறிந்து கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாது அந்த விமானங்களில் அனைத்து விவரங்களையும் இந்த இணையப் பக்கத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

தற்போது மேலே பறந்து கொண்டிருக்கும் இந்த விமானத்தை பற்றிய விவரங்கள் அறிந்து கொள்ள வேண்டுமோ அந்த விமானத்தை இந்த இணையப்பக்கத்தில் Click செய்வதன் மூலம் அந்த விமானம் எங்கிருந்து புறப்பட்டது எந்த இடத்திற்கு செல்கிறது எவ்வளவு நேரம் ஆகும் அந்த இடத்தை அடைய என்ற பல விவரங்களை இந்த இணையப் பக்கத்தின் மூலம் நாம் அறிந்துகொள்ள முடியும்.

இந்த இணைய பக்கத்தில் செல்ல கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தை Click செய்யவும்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளங்களைப் பற்றிய முழு விவரங்களும் வீடியோவாக காண விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள Youtube video காணொளியை முழுமையாக பார்க்கவும்.


Previous Post
Next Post