How To Make Your Animation Miniature Character in Mobile | Cartoon Animation Character | Master Mind

உங்களின் அனிமேஷன் கார்ட்டூன் கதாபாத்திரம் உருவாக்கும் அப்ளிகேஷன்.





வணக்கம் நண்பர்களே! இன்றைய பதிவு அனிமேஷன் பற்றிய ஒரு பதிவு. இந்த பதிவில் உங்களது மொபைலில் எவ்வாறு உங்கள் முக அமைப்பு கொண்ட அனிமேஷன் கதாபாத்திரங்கள் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் உருவாக்குவது என்பதை பற்றி விரிவாகக் காணவிருக்கிறோம்.

இந்த பதிவில் நாம் காண இருக்கும் இந்த அனிமேஷன் கதாப்பாத்திரம் என்பது உங்களது ஒரு சிறிய கதாபாத்திரம் Miniature Character உருவாக்க உதவும் ஒரு அற்புதமான செயலி.

இதுபோன்ற அனிமேஷன் கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்க கணினி மற்றும் மென்பொருள் (Softwares) தேவைப்படும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். 

ஆனால் இப்பொழுது உள்ள அறிவியல் காலத்தில் எப்படிப்பட்ட அனிமேஷன் கதாபாத்திரத்தையும் நமது கையில் இருக்கும் கைபேசி மூலமாகவே உருவாக்க முடியும்.

அந்த அனிமேஷன் கதாபாத்திரங்களை உருவாக்கும் செயலி மட்டும் நமது மொபைலில் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தால் போதும்.

அந்த செயலியை கொண்டு நாம் எப்படிப்பட்ட அனிமேஷன் கதாபாத்திரங்களையும் மிகவும் எளிமையாக உருவாக்கிக்கொள்ள முடியும்.

அதில் நாம் இன்று காணவிருப்பது நமது சிறிய உருவம் கொண்ட அனிமேஷன் கார்ட்டூன் கதாபாத்திரம் உருவாக்குவது எப்படி என்பதை விரிவாகக் காணவிருக்கிறோம்.

அதற்க்கு முன்னதாக நமது முந்தைய பதிவில் உங்கள் மொபைல் கொண்டு  அணிமேஷன் கார்ட்டூன் படங்கள், பல காட்சிகளைக் கொண்ட அனமேஷன்  படங்களை எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றி ஒரு பதிவில் தெரிவித்திருக்கிறோம்.

அப்படி அந்த அனிமேஷன் திரைப்படங்களை உருவாக்க உதவும் செயலின் பதிவிறக்கம் செய்யும் இணையப்பக்கத்தையும் அந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்தப் பதிவை படிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தை Click செய்யவும்.

தற்போது வாருங்கள் இந்த பதிவில் நாம் இந்த செயலியை பற்றிப் பார்க்க விருப்பம் இந்த செயலியில் எவ்வாறு உங்களது அனிமேஷன் கார்ட்டூன் கதாபாத்திரங்களை மிகவும் எளிமையாக உருவாக்குவது என்பதைப் பற்றியெல்லாம் விரிவாக காண்போம்.

Zepeto App:

இந்தப்பதிவில் குறிப்பிட்டுள்ளதை போல அனிமேஷன் கார்ட்டூன் சிறு கதாபாத்திரங்கள் (Miniature) நாம் நமது கைப்பேசியில் உருவாக்க Zepeto எனும் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

இந்த Zepeto செயலி முழுவதும் இலவசமான ஒரு செயலி இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பினால் இந்த செயலி Google Playstore இல் உள்ளது.

உங்களது மொபைலில் Google Playstore application ஐ Open செய்து அதில் Zepeto என்று கொடுத்து Search செய்தால் உங்களுக்கு இந்த செயலி கிடைக்கும் அதனை பதிவிறக்கம் செய்து கொண்டு நீங்கள் உங்கள் மொபைலில் சிறந்த அனிமேஷன் கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்கி கொள்ள முடியும்.

இந்த ZEPETO செயலியை பதிவிறக்கம் செய்யும் இணையம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இணையத்தில் சென்றோம் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.


இந்த செயலி முழுவதும் இலவசமாக அனிமேஷன் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் உருவாக்க உதவும் ஒரு செயலி.

இந்த செயலியை பதிவிறக்கம் செய்த பிறகு உங்களது மொபைலில் இதை Open செய்யுங்கள் அதில் சில Permission கொடுக்க சொல்லும் அதைக் கொடுத்து ஓபன் செய்த பிறகு உங்களுக்கு சில கார்ட்டூன் கதாபாத்திரங்கள் வரும்.

இதில் கொடுக்கப்பட்டுள்ள அந்த கதாபாத்திரங்களில் ஏதேனும் ஒரு கதாபாத்திரங்களை தேர்ந்தெடுங்கள் இல்லை உங்களது முக அமைப்பை கொண்ட ஒரு புது கதாபாத்திரம் உருவாக்க வேண்டும் என்று நினைத்தால் அதையும் உருவாக்கிக்கொள்ள முடியும்.

கீழே Camera option இருக்கும் அதில் சென்று உங்களது புகைப்படத்தை இந்த செயலியில் பதிவிறக்கம் செய்யுங்கள் செய்த பிறகு உங்களது முக அமைப்புக்கு ஏற்ற ஒரு கதாபாத்திரம் உங்களுக்கு இந்த செயலி உருவாக்கிக் கொடுக்கும்.

அப்படி இந்த செயலி கொடுத்த அந்த கதாபாத்திரத்தை மேலும் உங்களது முக அமைப்புக்கு ஏற்றவாறு நீங்கள் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். அந்த கதாபாத்திரத்தில் உங்கள் முக அமைப்பிற்கு ஏற்றவாறு தலைமுடி மற்றும் உடை அலங்காரங்கள் என அனைத்தும் நீங்கள் விரும்பும் வகையில் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.

உங்களது அனிமேஷன் கதாபாத்திரங்களை முழுவதும் உருவாக்கிய பிறகு Next button கொடுத்து அடுத்த பக்கத்திற்கு சென்றால் அங்கு உங்களுக்கு பல நடன அமைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதில் கொடுக்கப்பட்டுள்ள எந்த நடன அமைப்பை வேண்டுமானாலும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இப்படி நீங்கள் தேர்ந்தெடுக்கும் அந்த நடன அசைவுகளை உங்களது இந்த கதாபாத்திரம் செய்து காட்டும்.

அந்த நடன அசைவுகளுக்கு ஏற்றவாரு பாடல்கள் உங்கள் மொபைலில் இருந்து upload செய்து கொள்ள முடியும். இந்த செயலிலும் சில பாடல்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அதையும் உபயோகித்துக்கொள்ளலாம்.

இந்த செயலியில் AR தொழில்நுட்பமும் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த AR தொழில்நுட்பம் கொண்டு உங்களது வீட்டினுள் அல்லது நீங்கள் விரும்பும் இடத்தில் அந்த கதாபாத்திரத்தை உங்கள் கண்முன் அல்லது உங்கள் பக்கத்தில் உண்மையாக ஆடுவது போன்ற ஒரு துன்பத்தை உருவாக்கிக்கொள்ள முடியும் அதனை வீடியோவாகவும் record செய்து கொள்ள முடியும்.

அவ்வாறு Record அந்த நடன அசைவுகளை நீங்கள் உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். உங்களது மொபைலில் அதனைப் பதிவிறக்கம் செய்யும் போது இந்த செயலியின் Watermark இருக்கும் வகையிலும் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த Zepeto செயலியின் Watermark வேண்டாம் என்று நினைத்தால் அந்த Watermark இல்லாமலும் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

மேலும் இந்த செயலி கொண்டு எவ்வாறு அணிமேஷன் கார்ட்டூன் கதாப்பாத்திரம் உருவாக்குவது என்பதைப்பற்றி வீடியோவாக காண விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள Youtube வீடியோவை கிளிக் செய்யவும்.

YOUTUBE VIDEO



Previous Post
Next Post