Morphing - The Best App To Create Your Animation Video | Face Morphing Change Your Face to Your Favourite Celebrity Face | Master Mind

Morphing - Change Your Face To Your Favourite Celebrity Face



வணக்கம் நண்பர்களே! இந்த பதிவு உங்கள் எல்லாருக்கும் விருப்பமான அணிமேஷன் வீடியோ உருவாக்கம் பற்றிய பதிவு.

இந்த பதிவில் எவ்வாறு உங்கள் மொபைலில் சிறந்த வகையிலான அணிமேஷன் உருவாக்குவது என்பதை விரிவாக பார்க்கவிருக்கிறோம்.

இந்தப் பதிவில் நாம் பார்க்க இருக்கும் இந்த அணிமேஷன் வீடியோ உருவாக்கம் உங்கள் முக அமைப்பை கொண்ட அனிமேஷன் வீடியோவை உருவாக்கும் ஒரு செயலியை பற்றிய பதிவு.

நம் அனைவருக்கும் அனிமேஷன் மூவி பார்ப்பது மிகவும் பிடித்த ஒன்றே. அதுவே அந்த அனிமேஷன் வீடியோவில் உங்களுக்கு பிடித்த நாயகர்களில் கதாபாத்திரத்தில் நீங்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை உங்களுக்கு மிகவும் தத்ரூபமாக காட்டும் ஒரு செயலியை பற்றியே இந்த பதிவில் நாம் காணவிருக்கிறோம்.

அதுபோன்ற அனிமேஷன் கார்ட்டூன் கேரக்டர், சாதாரண அனிமேஷன் கார்ட்டூன் கேரக்டர் இல்லைங்க சூப்பர் ஹீரோஸ் அயன் மேன், கேப்டன் அமெரிக்கா, சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் மாதிரியான உங்களுக்கு பிடித்த உங்களுடைய சூப்பர் ஹீரோஸ் கதாபாத்திரத்தில் நீங்க இருந்தாள் எப்படி இருக்கும் என்ற ஒரு சூப்பரான அனுபவத்தை கொடுக்க போகும் ஒரு செயலியை பற்றி பார்ப்போம்.

Animation நம் எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஒன்றே, ஆனால் அதை எப்படி உருவாக்குவது? அதை உருவாக்க நம்மிடம் லேப்டாப் கம்ப்யூட்டர் போன்ற தொழில்நுட்பங்கள் தேவைப்படும் அதுமட்டுமில்லாது அனிமேஷன் உருவாக்க சாப்ட்வேர் தேவைப்படும் என்ற எண்ணம் பலர் மனதில் உள்ளது. 

ஆனால் இப்பொழுது இருக்கும் இந்த காலகட்டத்தில் அதுபோன்ற அணிமேஷன் கதாபாத்திரங்கள் கொண்ட வீடியோவை உருவாக்குவது மிகவும் எளிமையான ஒன்று. உங்களது மொபைல் போன் மூலமாகவே இதுபோன்ற அனிமேஷன் வீடியோக்களை உங்களால் உருவாக்கிக் கொள்ள முடியும்..

அப்படி உங்களுடைய முக அமைப்பைக் கொண்ட உங்களது விருப்பமான கதாப்பாத்திரங்களை உங்கள் கண் முன் கொண்டுவந்து நிறுத்த உதவும் ஒரு செயலியை பற்றி இந்தப் பதிவில் நான் உங்களிடம் கூற உள்ளேன்.

Morphing App:


நாம் மேலே குறிப்பிட்டது போல உங்களுடைய ஸ்மார்ட்போனில் அனிமேஷன் வீடியோ உருவாக்க உதவும் ஒரு செயலி தான் "MORPHING".  இந்த 
Morphing செயலியை உபயோகப்படுத்தி உங்களுக்கு பிடித்த சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்கள் திரையில் நடித்த காட்சிகளில் நீங்கள் நடித்தால் எவ்வாறு இருக்கும் என்பது போன்ற வீடியோக்களை உருவாக்கி கொள்ள முடியும்.

அதுமட்டுமல்லாது இன்னும் பல வீடியோ காட்சிகள் இந்த செயலியில் கொடுக்கப்பட்டிருக்கும். பல நகைச்சுவையான காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் போன்றவை கொடுக்கப்பட்டிருக்கும் அதில் உங்கள் புகைப்படத்தை கொண்டு உங்களது முகத்தை அந்த வீடியோவில் Morphing (முகம் மாற்றம்) செய்து பார்த்துக்கொள்ள முடியும்.

இந்த செயலியை உபயோகப்படுத்தி நீங்கள் உங்கள் அணிமேஷன் வீடியோ உருவாக்க விரும்பினால் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யும் இணைய பக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை Click செய்து இந்த செயலியை உங்களது ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து கொண்டு உங்கள் அனிமேசன் படங்களை உருவாக்கலாம்.

APP DOWNLOAD LINK


இந்த செயலியை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து அதை ஓபன் செய்தால் முதல் பக்கத்தில் சில வீடியோ காட்சிகள் உங்களுக்கு காண்பிக்கும் அந்த வீடியோ காட்சிகளில் உங்கள் முக அமைப்பைக் கொண்ட கதாபாத்திரங்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்.

அதற்கு இந்த செயலியில் முதல் பக்கத்தில் மேலே உங்கள் புகைப்படத்தை upload செய்யும் option கொடுக்கப்பட்டிருக்கும் அதில் உங்களது புகைப்படத்தை அப்லோட் செய்ய வேண்டும்.

புகைப்படத்தை அப்லோட் செய்த பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் எந்த வீடியோவை உங்கள் முக அமைப்பை கொண்ட கதாபாத்திரங்களுடன் ஒரு அனிமேஷன் வீடியோவாக உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அந்த வீடியோ காட்சியை தேர்ந்தெடுக்கவும்.

வீடியோ காட்சியை தேர்ந்தெடுத்ததும் அந்த வீடியோ காட்சியில் உங்கள் புகைப்படத்தை கொண்டு உங்கள் முக அமைப்பை கொண்ட கதாபாத்திரங்களை உருவாக்கும் பணியில் இந்த செயலி தொடங்கும்.

அப்படி உங்களுக்கு அனிமேஷன் கதாபாத்திரங்களை உருவாக்க சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும். அந்த நேரத்தில் உங்களுக்கு அந்த கதாபாத்திரத்தை பற்றிய சில கேள்விகள் கேட்கப்படும் உங்களுக்கு அந்த கேள்விக்கான விடை தெரியும் எனில் அந்த கேள்விக்கான விடையை அங்கு அளித்து அந்த சிறிது நேரத்தை நீங்கள் கழிக்கலாம்.

அப்படி சிறிது நேரத்தில் உங்களது முக அமைப்பைக் கொண்ட அனிமேஷன் காட்சிகளை உங்களுக்கு இந்த செயலி உருவாக்கிக் கொடுத்து விடும் அதனை நீங்கள் உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் இந்த செயலியை பற்றிய முழு விவரங்களுக்கு இந்த செயலியை எப்படி உபயோகிப்பது என்பதை வீடியோவாக காண விரும்பினான கீழே கொடுக்கப்பட்டுள்ள Youtube வீடியோவை முழுமையாக பார்க்கவும்.



Previous Post
Next Post