Best Application To Do Workout From Home | Best Workout Tips | Wight Gain And Loss | Master Mind

வீட்டில் இருந்தபடி உடற்பயிற்சி செய்வதற்கு, உடற்பயிற்சி சம்பந்தமான அனைத்து சந்தேகங்களை தீர்க்கும் செயலி



வணக்கம் நண்பர்களே! இன்றைய பதிவில் நாம் காணவிருப்பது உங்கள் உடலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும் உடற்பயிற்சியை உங்கள் வீட்டில் இருந்தவரை செய்ய உதவும் ஒரு செயலியை பற்றிய பதிவு இது.

உங்களில் பலருக்கு உங்கள் உடலை ஆரோக்கியமாகவும் கவர்ச்சிகரமாகவும் மாற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கும் அதற்கான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும்.

ஆனால்! உடற்பயிற்சி எவ்வாறு செய்வது? எங்கு செய்வது? எப்படி செய்வது? எந்த நேரத்தில் செய்வது? எவ்வளவு நேரம் செய்வது? என்ன உடற்பயிற்சிகள் செய்தால் உடல் எடை அதிகரிக்கும்? எந்த உடற்பயிற்சி செய்தால் உடல் எடை குறையும்? அல்லது எந்த உடற்பயிற்சி செய்தால் கவர்ச்சிகரமான உடல் கட்டமைப்புகள் தோன்றும்?  என்பது போன்ற பல கேள்விகள் உங்களுக்குள் இருக்கும்.

அப்படிப்பட்ட கேள்விகளுக்கும் உங்கள் உடல் பயிற்சி சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்கும் விடை இந்த ஒரு செயலியில் உங்களுக்கு கிடைக்கும்.

நம் அனைவருக்கும் நம் உடலை அழகாகவும், ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும், கவர்ச்சியாகவும் வைத்துக்கொள்ளவேண்டும் எனும் ஆசை இருக்கும்.

அதற்காக பலர் ஜிம் சென்று உடற்பயிற்சி செய்து அவர்களது உடலை கட்டுக்கோப்பாகவும், கவர்ச்சியாகவும் வைத்திருப்பார்கள்.

ஆனால் பலர் ஜிம் செல்வதற்கு பணம் செலவழிக்க எண்ணியும், ஜிம்மில் பயிற்றுவிக்கும் உடற்பயிற்சியை செய்ய முடியுமா என்ற சந்தேகத்தால் ஜிம் செல்லாது இருப்பர்.

அதில் சிலர் தனது வீட்டிலேயே தம்மால் இயன்ற உடற்பயிற்சியை செய்து வருவார்கள். அப்படி வீட்டில் உடற்பயிற்சி செய்யும் பலர் அவர்கள் செய்யும் உடற்பயிற்சி என்ன பயனளிக்கும் என்பதை பற்றி அறியாமல் தமக்குத் தெரிந்த ஒரு சில உடற்பயிற்சியை மறுபடியும் மறுபடியும் செய்து வருவார்கள்.

சிலர் தமக்கு தேவையான உடற்பயிற்சியை விடுத்து அதற்கு நேர்மாறாக உடல் எடையை அதிகரிக்க விரும்புவோர் உடல் எடையை குறைக்கக்கூடிய உடற்பயிற்சியையும், உடல் எடையை குறைக்க விரும்புவோர் உடல் எடையை அதிகரிக்க உதவும் உடற்பயிற்சியையும் தெரியாமல் செய்து வருவார்கள்.

எனவே அப்படி வீட்டில் இருந்தபடி உடற்பயிற்சி செய்ய விரும்புவோருக்கு அவர்களது வீட்டிலேயே ஜிம் பயிற்சியாளர் போல் தங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை அந்த உடற்பயிற்சியினால் ஏற்படும் நன்மைகளையும் எடுத்துக்கூறி அந்த உடற்பயிற்சிகளை எவ்வாறு பண்ண வேண்டும் எவ்வளவு நேரம் பண்ண வேண்டும் என்பனவற்றை எல்லாம் எடுத்துக் கூறினால், எப்படி இருக்கும்!!

அப்படி ஜிம் பயிற்சியாளர் போல் தங்களுக்கு உடற்பயிற்சியை கற்றுத்தரும் ஒரு சிறந்த செயலியை பற்றியும் அந்த செயலியை பதிவிறக்கம் செய்யும் இணையதள பக்கத்தையும் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.

Fityfy App

உங்களது உடற்பயிற்சியாளர் போன்று உங்கள் அருகில் இருந்து உங்களுக்கு எவ்வாறு உடற்பயிற்சி செய்வது என்ன உடற்பயிற்சி செய்வது என்பது போன்ற பலவற்றை கூறும் செயலி இந்த Fityfy செயலி.

இந்த Fitify செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தை Click செய்யவும்.



இந்த செயலியை பதிவிறக்கம் செய்தபிறகு உங்களைப் பற்றிய விவரங்களை இந்த செயலியில் கொடுக்க வேண்டும். அந்த விவரங்களைக் கொடுத்து இந்த செயலியை நூல் நுழைந்த பிறகு உங்களுக்கு எந்த வகையான உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை பற்றிய கேள்வி இருக்கும்.
  • நீங்கள் உடல் எடையை அதிகரிக்க விரும்புகிறீர்களா?
  • நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா?
  • அல்லது நீங்கள் உடலில் அமைப்பை மாற்றி அழகான தோற்றத்தை பெற விரும்புகிறீர்களா.
இதுபோன்ற கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும் அதில் நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை தேர்ந்தெடுத்து உள்ளே செல்லவும்.

இந்த செயலியில் இலவசமாக ஒரு சில உடற்பயிற்சி குறிப்புகளை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இன்னும் பல உடற்பயிற்சி குறிப்புகளை நீங்கள் பெற வேண்டும் என்று நினைத்தால் இந்த செயலியில் பணம் செலுத்தியும் பெற்றுக்கொள்ளமடியும்.

பணம் செலுத்தி இதுபோன்ற உடற்பயிற்சி குறிப்புகளை நீங்கள் பெற்றுக்கொள்ள பல Pack இதில் கொடுக்கப்பட்டிருக்கும் அதை தேர்ந்தெடுத்து அந்த குறிப்புகள் அனைத்தையும் நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்தவாறே செய்து உங்கள் உடல் தோற்றத்தை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.

இலவசமான குறிப்புகளைக் கொண்டு உங்கள் எடையை அதிகரிக்கவோ? குறைக்கவோ? அல்லது உடல் தோற்றத்தை மாற்றி அமைக்கவோ விரும்பினால்? அதை யும் நீங்கள் செய்து கொள்ள முடியும்.

இந்த செயலில் உங்களுக்கு வேண்டிய உடற்பயிற்சிகள் அனைத்தும் விரைவாக கொடுக்கப்பட்டிருக்கும் அந்த உடற்பயிற்சி செய்வதன் மூலம் உங்களுக்கு என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது பற்றிய விவரங்களும்.

அந்த உடற்பயிற்சியை செய்யும் பது அதை எவ்வளவு நேரம் செய்யவேண்டும் என்பதற்கு நேரமும் (Timer Option) உங்களுக்கு இந்த செயலியில் கொடுக்கப்பட்டிருக்கும்.

இந்த செயலியை பயன்படுத்தி எவ்வாறு உடற்பயிற்சி கற்றுக் கொள்வது என்பதைப் பற்றி முழு விவரங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள YouTube வீடியோவை முழுமையாக பார்க்கவும்.

YOUTUBE VIDEO


Previous Post
Next Post