Ouija Board - Whatever The Questions You Will Get a Answer Here | Ouija Boare is a Fun Board To Answer Your All Questions | Master Mind

OUIJA BOARD



வணக்கம் நண்பர்களே! இன்றைய பதிவில் நாம் காணவிருப்பது பலரால் இன்றளவும் நம்பப்படுவது பல திரைப்படங்களிலும் நீங்கள் பார்த்திருக்கக்கூடிய பேய்களுடன் பேச உதவும் பலகை என நம்பப்படும் Ouija Board பற்றி பார்க்கவிருக்கிறோம். 

இந்த Ouija Board இதுவரை நீங்கள் பயன்படுத்தி பார்க்க வில்லை என்றால் உங்களுக்காகவே இந்த ouija board பலகையை இணையத்தில் உருவாக்கியுள்ள ஒரு இணைய பக்கத்தை பற்றி உங்களுடன் பகிர போகிறேன்.

OUIJA BOARD:

இந்த ஃபோர்ட் முதலில் கண்டறியப்பட்டது 19 ஆம் நூற்றாண்டில். 1848 இல் நியூ யார்க் நகரத்தை சேர்ந்த “ஃபாக்ஸ் சிஸ்டர்ஸ் (fox sisters)"  என்று அழைக்கப்பட்ட Leah  Margret மற்றும் kate தங்களால் ஆவிகளுடன் பேச முடியும் என்றும் ஆவிகள் இவர்களிடம் சுவற்றில் அடித்து பதில் கூறும் என்றும் கூறியிருக்கின்றனர். 

இதற்கு பிறகுதான் இறந்தவர்களிடம் பேச முடியும் எனும் செய்தி அமெரிக்கா முழுவதும் வலம்வர ஆரம்பித்தது. 

ஆனால் அப்போது ஆவிகளுடன் பேச இந்த Ouija Board பயன்படுத்தவில்லை. அப்போது பயன்படுத்திய பலகையின் பெயர் "Seneses". 

அதற்குப் பின்பு ஆன்மீக வாதிகளால் கண்டுபிடிக்கப்பட்டது இந்த Ouija Board என்பது.

இந்த Ouija Board பார்ப்பதற்கு ஒரு சாதாரண சதுரங்கப் பலகை போல்தான் இருக்கும். அந்தப் பலகையில் ஆங்கில எழுத்துக்கள் 26-ம் பொறிக்கப்பட்டிருக்கும் கீழே எண்கள் 0 to 9 கொடுக்கப்பட்டிருக்கும் மேல் பகுதியில் ஆம் இல்லை எனும் இரண்டு வாக்கியங்கள் இடம் பெற்றிருக்கும்.

இந்த பலகை முன் யார் அமர்ந்து எந்த ஆவிகளுடன் பேச வேண்டும் என்று விரும்புகிறார்கள அவர்களை மனதில் நினைத்துகேள்விகள் கேட்கும் பொழுது. இந்த பலகையில் உள்ள நிலை காட்டி அந்தக் கேள்விக்கு ஏற்ற விடைகளை காட்டும்.

அந்த விடைகள் உயிரிழந்த ஆவிகளிடம் இருந்து வரும் விடைகள் தான் என அப்பொழுது பலரால் நம்பப்பட்டு வந்தது.

இந்த Ouija Board ஐ சீனர்கள் 1100AD இல் இதனை கண்டுபிடித்தனர். இதனை முதலில் பேய் ஓட்டுவதற்காக பயன்படுத்தி வந்தனர் பிறகு காலப்போக்கில் இதனை பலர் ஒரு விளையாட்டாக பயன்படுத்தத் தொடங்கினர். 


OUIJA BOARD WEBSITE:

அப்படிப்பட்ட அந்த Ouija Board ஐ இணையத்தில் ஒரு விளையாட்டாக உருவாக்கியுள்ளனர். 

அந்த இணையதளத்திற்கு சென்று அதில் எந்த ஒரு கேள்வியை நீங்கள் கேட்டாலும் அந்த இணைய தள பக்கத்தில் இருக்கும் Ouija Board உங்களுக்கு அதன் பதிலை கொடுக்கும். பல சுவாரஸ்யமான பதில்கள் உங்களுக்கு இந்த Ouija Board மூலம் கிடைக்கும்.

இந்த இணைய பக்கத்தில் சென்று நீங்கள் கேட்க விரும்பும் கேள்வியை  கேட்கும்பொழுது அதில் கொடுக்கப்பட்டுள்ள அந்த நிலைக் காட்டி (cursor) ஒவ்வொரு எழுத்துக்களாக சுட்டிகாட்டி நமது கேள்விக்கு ஏற்ப ஒரு முழு வாக்கியத்தை பதிலாக நமக்கு கொடுக்கும்.

இந்த இணையத்தில் நீங்கள் கேட்கும் கேள்விகள் அனைத்துக்கும் மிகவும் நகைச்சுவையான பதில்களே பெருவாரியாக கிடைக்கும். அப்படிப்பட்ட பதில்கள் கிடைக்கும் வகையில் இந்த இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த Ouija Board இணையதள பக்கத்திற்கு செல்ல கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தை Click செய்யவும்.

Ouija Board Website


இந்த Ouija Board இணையதள பக்கம் மிகவும் பழமையான இணையதள பக்கம், சரியான பராமரிப்புகள் இல்லாத காரணத்தால் இந்த இணையதளம் சற்று மெதுவாகவே உங்களுக்கு செயல்படும்.

எனவே இந்த Ouija Board பயன்படுத்திப் பார்க்க விரும்பினால் சற்று பொறுமை கண்டிப்பாக தேவை பொறுமையாக அதில் நீங்கள் என்ன கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை அதில் பதிவு செய்யுங்கள்.

உங்கள் கேள்விகளை நீங்கள் பதிவு செய்த பிறகு அந்த Ouija Board இல் உள்ள நிலை காட்டி உங்களுக்கான விடையை ஒவ்வொரு எழுத்துக்களாக பொறுமையாக உங்களுக்கு காட்டும்.

அந்த ஒவ்வொரு எழுத்துக்களையும் ஒன்று சேர்த்தால் உங்களுக்கு ஒரு முழுமையான வாக்கியம் கிடைக்கும் அந்த வாக்கியம் தான் உங்களுக்கான பதில்.

இந்த இணையதள பக்கத்தை உபயோகித்துவிட்டு உங்களது கருத்துக்கள் மற்றும் நமது இந்த பதிவை பற்றிய உங்களது கருத்துக்கள் கேள்விகள் எதுவாக இருந்தாலும் இந்த பக்கத்தில் பதிவு செய்யவும்.

இந்த  Ouija Board இணையதள பக்கத்தை பற்றிய வீடியோவை காண விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள YouTube டியோவை பார்க்கவும்.



Previous Post
Next Post