Mug Life Funny Animation expression Making App | Make your Photo into Animation Video | Master Mind


Mug Life Animation Making:


வணக்கம் நண்பர்களே! இந்த பதிவில் நாம் காணவிருப்பது உங்களது மொபைலில் எந்த அசைவுகளும் இல்லாமல் சாதாரணமாக இருக்கும் புகைப்படத்தை அசைவுகளுடன் நகைச்சுவையான முகபாவனைகள் உடன் மாற்றிக் கொடுக்கும் ஒரு செயலியை பற்றியே இந்த வீடியோவில் காணவிருக்கிறோம்.

இந்த செயலி வழியாக உங்களது புகைப்படத்தையோ, உங்களுக்கு விருப்பமானவர்கள் புகைப்படத்தையோ, விலங்குகளின் புகைப்படத்தையோ, அல்லது ஏதேனும் சிலைகள் புகைப்படத்தையோ எதை வேண்டுமானாலும் மனிதர்கள் முகபவனைகளை போன்ற நகைச்சுவையான முகபாவனைகளை கொடுத்து அதை ஒரு வீடியோவாக அல்லது GIF file ஆக மாற்றி உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த செயலி சாதாரணமாக அல்லது மிகவும் தத்ரூபமாக எவரும் இது புகைப்படம் என்று கண்டு அறியாதவாறு உங்களது புகைப்படத்தை  மிகவும் தத்ரூபமாக Edit செய்து கொடுக்கும்.

MUG LIFE:

உங்களது புகைப்படத்திற்கு மிகவும் தத்ரூபமாக உயிரூட்டி தர உதவும் இந்த செயலியின் பெயர் Mug Life.

இந்த Mug Life செயலி மூலம் உங்களது புகைப்படத்தை உயர்தர அனிமேஷன் உடன் வீடியோவாகவும் அல்லது GIF image ஆகவும் மாற்றிக்கொள்ள முடியும்.

இந்த Mug Life செயலியை பதிவிறக்கம் செய்ய இந்த பதிவிற்கு கடைசியாக கொடுக்கப்பட்டுள்ள இணையத்தின் உள் சன்று இந்த செயலியை உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த செயலி Google Play Store இல் உள்ளது எனவே உங்கள் மொபைலில் உள்ள Google Play Store app க்குள் சென்று Mug Life என பதிவு செய்து தேடினால் உங்களுக்கு இந்த செயலி கிடைக்கும்.

இந்த Mug Life செயலியை உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்து அதனுள் சென்றால் இந்த செயலியை பயன்படுத்தி இதற்கு முன்பு பலர் உருவாக்கிய வீடியோக்கள் அங்கு இருக்கும்.

உங்களது புது வீடியோவை நீங்கள் உருவாக்க உங்களது புகைப்படத்தை இதனுள் upload செய்ய வேண்டும்.

இந்த செயலியில் உங்களது புகைப்படத்தை பதிவிறக்கம் செய்த பிறகு அதில் பல முகபாவனைகள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் உங்களது புகைப்படம் எந்த முகபாவனை செய்யவேண்டும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களோ அந்த முக பாவனைகளை கொடுத்து உங்களது புகைப்படத்தை வீடியோவாக மாற்றிக்கொள்ள முடியும்.

இந்த செயலியில் பல நாடுகளில் உள்ள பல தங்களது புகைப்படத்தை பல நகைச்சுவையான முக பாவனைகளுடன் மாற்றிக்கொண்டு அதனை இந்த செயலி யிலேயே பதிவாக பதிவு செய்து உள்ளனர் அந்த பதிவுகளை உங்களால் பார்க்க முடியும்.

அதுமட்டுமல்லாது அவர்கள் அந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள முக பாவனைகளையும் உங்களது புகைப்படத்தில் உபயோகப்படுத்த முடியும்.

இந்த செயலியை பயன்படுத்தி உங்களது புகைப்படம் மட்டுமல்லாது உங்கள் வீட்டில் உள்ள செல்லப் பிராணிகளான நாய், பூனை போன்ற விலங்குகளின் முக பாவனையும் மனிதர்கள் முகபாவனைகளை போல நகைச்சுவையாக மாற்றி பார்க்க முடியும்.

அதுமட்டுமல்லாது பொம்மைகள் மற்றும் சிலைகளுக்கும் முகபாவனைகளை கொடுத்து வீடியோவாக மாற்றி அதனை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

ஆனால் அப்படி விலங்குகள் அல்லது சிலைகளுக்கு முகபாவனைகள் கொடுத்து அந்த போட்டோவை வீடியோவாக மாற்ற வேண்டுமெனறால் அதற்கு இந்த செயலியில் பணம் செலுத்தி Premium membership பெற வேண்டும்.

அப்படி பணம் செலுத்தி Premium Membership பெற்றவர்களால் மட்டுமே அவர்களது பிராணிகள், விலங்குகள் மற்றும் சிலைகளுக்கு உயிர் கொடுத்து ஒரு வீடியோவாக மாற்ற உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

பணம் செலுத்தாமல் விலங்குகள் மற்றும் சிலைகள் புகைப்படத்தை இதில் Edit செய்ய, இந்த செயலியில் இதற்கு முன்னர் பலர் விலங்குகளையும் சிலைகளையும் வைத்து வீடியோக்கள் Edit செய்து பதிவிறக்கம் செய்திருப்பார்கள்.

அவர்களது பதிவில் சென்று அவர்கள் edit செய்திருந்த அந்த விலங்குகள் அல்லது சிலைகளுக்கு இந்த செயலியில் உள்ள மேலும் சில அனிமேஷன் கொண்டு  அதனை மேலும் edit செய்து கொள்ள முடியும்.

இந்த செயலியில் உங்களது கற்பனைக்கு ஏற்றவாறு நீங்கள் புது முகபாவனை உருவாக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கும் இந்த செயலியில் வழி உள்ளது.

அப்படி நீங்கள் புது முகபாவனை உருவாக்க இந்த செயலியில் பணம் செலுத்தி Premium Membership பெற வேண்டும்.

அப்படி Premium Membership பெற்றாள் உங்களால் உங்கள் புகைப்படத்தில் எவ்வாறு முகபாவனைகள் மாற வேண்டும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா அதற்கு ஏற்றவாறு நீங்களே உங்களது வீடியோவை உருவாக்கி கொள்ள முடியும்.

இப்படிப்பட்ட பல நகைச்சுவையான முகபாவனைகளை மாற்றும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தை Click செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்



இந்த Mug LIfe செயலியை எப்படி உபயோகப்படுத்துவது என்பதை வீடியோ காணொளி மூலம் அறிய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.

YOUTUBE VIDEO


Previous Post
Next Post