Create Your Own Augmented Reality 3D Game on Your Mobile | Best Android App Available In Playstore | Master Mind

3D Augmented Realty Game Creator App:



வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நாம் காணவிருப்பது, மொபைலில் நீங்கள் விளையாடும் விளையாட்டுகளை உங்கள் கண் முன் உங்கள் வீடுகளில் AR தொழில்நுட்பம் மூலம் கொண்டு வந்து உங்கள் விளையாட்டு அனுபவங்களை இன்னும் வேறு ஒரு பரிணாமத்தில் கொண்டு போகும் ஒரு செயலியை பற்றிய இந்த பதிவில் நாம் காணவிருக்கிறோம்.

சிறுவயதில் தெருவில் இறங்கி ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்த நம்மை இன்று ஒரு சிறு பெட்டிக்குள் நம் கையில் இருக்கும் மொபைலில் அத்தனை விளையாட்டையும் அடக்கி நம்மிடம் கொடுத்துள்ளனர்.

இக்கால குழந்தைகளும் வெளியில் வீதியில் இறங்கி விளையாடுவதை விட தன் கையிலிருக்கும் மொபைலில் விளையாடுவதையே மிகவும் விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்த பல நிறுவனங்கள் விதவிதமான புது விளையாட்டுகளை மொபைலில் தினமும் அறிமுகப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் நாம் விளையாடும் விளையாட்டுுகளை இன்னும் அடுத்த கட்டத்துக்கு, நாம் அந்த காலத்தில் விளையாண்ட வாரே தெருவில் இறங்கி, ஆனால் நம் மொபைல் போனை வைத்து விளையாடக்கூடிய சில விளையாட்டுகளும் பல நிறுவனங்கள் தயாரித்து கொண்டுதான் வருகின்றன.

அந்த வகையில் Pokeman Go எனும் விளையாட்டு பலருக்கு தெரிந்திருக்க கூடும். இந்த விளையாட்டு முழுக்க முழுக்க Augmented Realty எனும் தொழில்நுட்பத்தை வைத்து உருவாக்கியிருந்தனர்.

இந்த விளையாட்டு வெளிநாடுகளில் பலர் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் இந்த ஒரு விளையாடினாள் பலருக்கு இடையூறு ஏற்படும் என்பதாலும் இந்த விளையாட்டை இந்தியாவில் தடை செய்து வைத்துள்ளனர்.

ஆனால் இந்த Augmented Reality என்பது எப்படி இருக்கும் அதில் எப்படி விளையாடலாம் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினாள் அதற்கு வேறு சில ஆண்ட்ராய்டு செயலிகள் பலர் வடிவமைத்துள்ளனர்.

விளையாட்டுக்கு மட்டுமல்லாது இன்னும் பல செயல்களுக்கும் இந்த Augmented Realty எனும் தொழில்நுட்பம் மிகவும் உதவிகரமாக உள்ளது.

பலர் அவர்கள் வீடுகளில் கட்டமைப்பை எவ்வாறு அலங்கரிப்பது என்பதை இந்த எளிய தொழில்நுட்பம் கொண்டு மிகவும் எளிமையாக கண்டறிகின்றனர்.

அவர்கள் வீடுகளில் எந்தெந்த பொருட்கள் எங்கு இருந்தால் அழகாக இருக்கும் என்பதை அந்த பொருட்களை வைத்து பார்ப்பதற்கு முன்பே இந்த Augumented Reality தொழில்நுட்பம் மூலம் அது அங்கு இருந்தால் எவ்வாறு இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.


Augmented Reality:

Augmented Reality என்பது என்னவென்று தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம்் காண்போம  Augmented Reality என்பது நம் கண்முன் இல்லாத ஒரு பொருள் அங்கு இருந்தால் எப்படிி இருக்கும் என்பதை நமக்கு காட்டும் ஒரு தொழில்நுட்பம் தான் இந்த Augented Reality.

ஆனால் இந்த தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்திப் பார்க்க நமக்கு மொபைல் போன் மாதிரியான தொழில்நுட்ப கருவி நமக்கு வேண்டும் அந்தக் கருவியின்்்் வாயிலாக நாம் இல்லாத ஒருு பொருள் அங்கு இருந்தால் எப்படிி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

அப்படி இந்த Augmented Realty தொழில்நுட்பத்தை வைத்து உருவாக்கப்பட்ட ஒரு செயலி தான் இந்த AR Toys என்னும் இந்த செயலி. இந்த செயலியில் நாம் Augmented Realty எப்படி இருக்கும் என்பதை நமது மொபைலில் பார்க்க முடியும்.

App Download Link


இந்த AR செயலியில் உங்களுக்கு வர் ரேஸ் Game கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இது சாதாரணமாக உங்கள் மொபைல்களில் விளையாடும் Car Race game இல்லை.

இந்த செயலியில் அந்த விளையாட்டுக்கு தேவையான Car, இடங்கள், பொருட்கள் அனைத்தும் தனித்தனியாக கொடுக்கப்பட்டிருக்கும் அதனை இந்த AR தொழில்நுட்பத்தின் உதவியுடன் உங்கள் கண் முன் உங்கள் வீட்டினுள் உண்மையாக இருந்தால் எப்படி இருக்குமோ அதுபோன்று நீங்கள் உருவாக்கிக் கொள்ள முடியும்.

அப்படி உங்களது விளையாட்டுக்குத் தேவையான இடங்கள் அனைத்தையும் நீங்கள் உருவாக்கிய பிறகு உங்களுக்கு தேவையான Car இதில் நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் உங்களுக்கு மூன்று விதமான car கொடுக்கப்பட்டிருக்கும். 

அந்த Car உங்கள் கண் முன் இந்த AR தொழில்நுட்பத்தின் உதவியுடன் கொண்டு வந்து அதனை ஒட்டி விளையாட முடியும்.

மேலும் விவரங்கள், இந்த செயலியை எப்படி உபயோகப்படுத்துவது என்பதை அறிந்து கொள்ள விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும். இந்த வீடியோவில் இந்த செயலியின் உபயோகம் மற்றும் பயன்பாட்டை குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளது.
Previous Post
Next Post