Tween craft - Best Animation Cartoon Story Making Android Mobile App | Tween craft Story Making Tutorial | Master Mind

BEST ANIMATED CARTOON STORY MAKING APP FOR ANDROID:


வணக்கம் நண்பர்களே! இந்த பதிவில் நாம் உங்கள் மொபைலில் தத்ரூபமான அணிமேஷன் கார்ட்டூன் படங்களை உருவாக்க உதவும் ஒரு அற்புதமான செயலியை பற்றி விரிவாக காணவிருக்கிறோம்.

இந்த செயலியில் உங்களுக்கு பிடித்த நடிகர்கள், கதாபாத்திரங்களின உருவ அமைப்பை கொண்ட அனிமேஷன் வீடியோக்களை உருவாக்கிக்கொள்ள முடியும்.

நீங்கள் உருவாக்கும் அனிமேஷன் விடியோவிர்க்கூ ஏற்றவாறு பல கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதைவைத்து உங்களுடைய அனிமேஷன் வீடியோவை உருவாக்கிக்கொள்ள முடியும்.

மேலும் அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமான voice மற்றும் உங்கள் voice க்கு ஏற்ப face expression என அனைத்து கொடுக்கமுடியும்.

இந்த செயலியில் உங்களால் ஒரு காட்சிகள் கொண்ட அனிமேஷன் வீடியோ மட்டும் இல்லாமல் பல கட்சிகளை கொண்ட அனிமேஷன் வீடியோக்களை உங்களால் உருவாக்கிக்கொள்ள முடியும்.

தற்போது இந்த செயலியை பயன்படுத்தி எவ்வாறு சிறந்த வகையில் அனிமேஷன் கதைகளை உருவாக்குவது என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.

TWEEN CRAFT:

நாம் இந்த பதிவில் காணவிருக்கும் அணிமேஷன் கார்ட்டூன் கதைகளை உருவாக்க உதவும் செயலி என் பெயர் "Tween Craft". இந்த செயலி உங்களுக்கு ப்ளே ஸ்டோரில் உள்ளது எனவே அங்கு சென்று இதனை உங்களால் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தில் சென்றும் உங்களால் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.



இந்த செயலியில் உங்களால் பல காட்சிகள் கொண்ட அணிமேஷன் கார்ட்டூன் படங்களை உங்களால் உருவாக்கிக்கொள்ள முடியும்.

இந்த செயலியில் பல பிரபலங்களின் முக அமைப்பில் உருவ அமைப்பில் பல நடிகர்்்களின்  அனிமேஷன் கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தியும் தங்களது அணிமேஷன் படங்களை உருவாக்கிக்கொள்ள முடியும்.

அந்த அனமேஷன் கதாபாத்திரங்களுக்கு உங்கள் கதைக்கு ஏற்றவாறு எப்படி அசைவுகள் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா, அதற்கு ஏற்றவாறு உங்களால் இந்த கதாபாத்திரங்களுக்கு அனிமேஷன் அசைவுகள் கொடுக்க முடியும்.

இந்த செயலியில் உங்களது அனிமேஷன் வீடியோ உருவாக்க என்ன என்ன editing tools கொடுக்கப்பட்டுள்ளது என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Tween craft Features:
  • Characters
  • Backgrounds
  • Background music
  • Sound effects
  • Different Scenes
  • Add text
  • Import images
  • Import GIF
  • Characters Expressions

இந்த செயலியில் உங்களுக்கு பல பிரபலமான திரைப்பட கதாப்பாத்திரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். Iron man, Deadpool, ra-one மற்றும் நமது இந்திய பிரதமர் மோடியின் கதாபாத்திரமும் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த கதாப்பாத்திரங்கள் கொண்டு உங்களது வீடியோவை முழுமையாக உங்களால் உருவாக்கிக்கொள்ள முடியும்.

அந்த அனிமேஷன் கதாபாத்திரங்களுக்கு நீங்கள் இந்த செயலியில் உங்களது குரல் கொண்டு குரல் அமைத்துக்கொள்ள முடியும். அதோடு அந்த குரலை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். நீங்கள் கொடுக்கும் voice இல் உங்களுக்கு வேண்டியவாறு pitch மாற்றிக்கொள்ள முடியும்.

அதேபோல் இந்த செயலியில் உங்கள் அணிமேஷன் படத்திற்கு ஏற்றவாறு பல Background images கொடுக்கப்பட்டிருக்கும். அதுமட்டுமில்லாது உங்கள் மொபைலில் உள்ள புகைப்படங்களையும்  நீங்கள்் உருவாக்கும் அனிமேஷன் அனிமேஷன் வீடியோவின் background ஆக பயன்படுத்தி கொள்ள முடியும்.

மேலும் அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான முகபாவனைகள், உங்கள் கதைக்கு ஏற்றவாறு Background Music மற்றும் பல Sound Effects உங்களுக்கு இந்த செயலியில் கொடுக்கப்பட்டிருக்கும் அதனையும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

இந்த செயலியில் உங்களுக்கு ஏற்றவாறு எத்தனை கட்சிகளை வேண்டுமானாலும் உருவாக்கிக்கொள்ள முடியும். அந்த ஒவ்வொரு கட்சிகளிலம வெவ்வேறு கதாப்பாத்திரங்கள், background அனைத்தும் உங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள முடியும்.

உங்கள் அனிமேஷன் வீடியோவில் நடுவில் எழுத்து வடிவில் நீங்கள் ஏதேனும
 கூற விரும்பினால் அதற்கான text option கொடுக்கப்பட்டுள்ளது. அந்த text option கொண்டு உங்கள் வீடியோவின் நடுவில் நீங்கள் கூற விரும்புவதை subtitles போன்று கொடுக்க முடியும்.

இந்த செயலியை எவ்வாறு உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்து மேலே கொரிபிட்டுள்ளதை போன்ற அனிமேஷன் வீடியோக்கள் உருவாக்குவது என்பது பற்றி வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை முழுமையாக பார்த்தும் நீங்கள் இந்த அனிமேஷன் வீடியோவை எவ்வாறு உருவாக்குவது என்பதை அறிந்துகொள்ளலாம்.


உங்களது கருத்துக்கள மற்றும் விமர்சனங்கள் அனைத்தும் வரவேற்கப்படுகிறது எனவே இந்த பதிவைப் பற்றி உங்களது கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை கீழே குறிப்பிடவும். இதுபபோன்று பதிவுகளை தொடர்ந்து படிக்க நமது master mind பக்கத்தை subscribe செய்துகொள்ளவும் நன்றி! வணக்கம்!.
Previous Post
Next Post