Best 3D Augmented Reality Android App | Using Expedition App Experience the AR Technology | Master Mind

Best 3D Augmented Reality Android App:



வணக்கம் நண்பர்களே, Augmented Realty பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் விரிவாக பார்த்தோம். அந்தப் பதிவில் இந்த Augumented Reality தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உங்கள் மொபைலில் விளையாடக் கூடிய ஒரு Game பற்றி விரிவாக கூறியுள்ள.

அந்தப் பதிவை நீங்கள் படிக்க வேண்டும் அந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி பார்க்க வேண்டும் என்று விரும்பினார் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தில் சென்று பார்க்கவும்.


Augumented Reality என்பது நம் கண்முன் இல்லாத பொருள் அங்கு இருந்தால் எப்படி இருக்கும் என்பதை உங்களுக்கு காட்டும் ஒரு அறிவியல் தொழில்நுட்பம்.

நமது முந்தைய பதிவில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த ஒரு ஆண்ட்ராய்டு கேம் பற்றி பார்த்தோம். இந்த பதிவில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் வேறு ஒரு  ஆண்ட்ராய்டு செயலியை பற்றி பார்க்கவிருக்கிறோம்.

இந்த செயலியை பயன்படுத்த உங்களது மொபைல் போனில் இன்டர்நெட் தொலைத்தொடர்பு தேவைப்படும். இந்த செயலியில் உங்களுக்கு AR (Augmented Reality ) மட்டுமல்லாது VR (Virtual Reality) யும் கொடுக்கப்பட்டிருக்கும்.

எனவே இந்த ஒரு செயலியை உபயோகப்படுத்தி நீங்கள் VR மற்றும் AR ஆகிய இரண்டு தொழில்நுட்பங்களையும் செயல்படுத்தி பார்க்க முடியும். 

Virtual Reality (VR) தொழில் நுட்பமும் இந்த Augumented Reality (AR) போன்ற ஒரு தொழில்நுட்பமே. இதில் உங்கள் கண்முன் இல்லாத ஒரு இடத்தை உங்கள் கண்முன் இந்த VR தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கிக் கொடுக்கும்.

அப்படி இந்த VR தொழில்நுட்பம் உருவாக்கிய இடத்தில், உண்மையில் இல்லாத பிம்பமாக உருவாக்கிய அந்த இடத்தில் நீங்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை உங்களுக்கு காட்டும் ஒரு அறிவியல் தொழில்நுட்பம் ஏன் இந்த VR தொழில்நுட்பம்.

அப்படி இந்த AR மற்றும் VR தொழில்நுட்பங்களை மிகவும் தத்ரூபமாக உங்கள் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் இந்த செயலியை பற்றி இந்த பதிவில் விரிவாகக் காணவிருக்கிறோம்.

GOOGLE EXPENDITION

இந்த AR மற்றும் VR தொழில்நுட்பங்களை உங்கள் கண் முன் மிகவும் தத்ரூபமாக காண்பிக்க உதவும் இந்த செயலியின் பெயர் Google Expendition.

AR தொழில்நுட்பம் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பல பொருட்கள் இந்த செயலியில் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை உங்களது இன்டர்நெட் உபயோகப்படுத்தி பதிவிறக்கம் செய்துகொண்டு அந்தப் பொருட்கள் அனைத்தையும் உங்கள் கண்்முன் நீங்கள் இருக்கும் இடத்தில் உண்மையாக இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி உங்கள் மொபைல் போன் வழியாக அதனைைப் பார்க்க முடியும்.

இந்த செயலில் கலை, அறிவியல், தொழில்நுட்பம், விலங்குகள், போன்ற பல வகையான AR  தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் இதில் கொடுக்கப்பட்டிருக்கும். அதுமட்டுமில்லாமல் பழங்காலத்தின  அறிய புகைப்படங்கள், பொருட்கள், மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பு உருவான விலங்குகளின் உருவங்களும் இந்த தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கிய கொடுக்கப்பட்டிருக்கும்.

அதனை பதிவிறக்கம் செய்து கொண்டு உங்களது இடங்களில் அவை அனைத்தையும் நேரடியாகப் பார்ப்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி பார்த்துக்கொள்ள முடியும்.

இந்த செயலியில் இந்த AR தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்ட விலங்குகள் அனைத்திற்க்கும் அணிமேஷன்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த விலங்குகள் அசைவது போன்ற அணிமேஷன்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும்.

அந்த விலங்குகளை உங்களது இடத்தில் நீங்கள் கொண்டு வரும்போது அந்த விலங்குகள் உங்கள் கண்முன் உண்மையாக இருப்பது போன்ற அசைவுகளை கொடுத்து உங்களை பிரமிக்க வைக்கும்.

இந்த செயலி Google Playstore இல் இலவசமாக உள்ளது எனவே நீங்கள் இந்த செயலியை பயன்படுத்தி பார்க்க வேண்டும் என்று நினைத்தால். இந்த செயலியை உங்கள் மொபைலில் உள்ள Google Playstore app இல் Google Expendition என search செய்து நீங்கள் உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த இணையத்தைப் பயன்படுத்தும் நீங்கள் இந்த செயலியை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்துகொண்டு பயன்படுத்தி பார்க்கலாம்.

App Downloading Link


இந்த செயலியை பற்றிய மேலும் தகவல்கள், இந்த செயலியை எவ்வாறு உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்வது, இந்த செயலியை எவ்வாறு உபயோகிப்பது, இந்த செயலியில் உள்ள AR மற்றும் VR தொழில் நுட்பங்களை எவ்வாறு உபயோகிப்பது என்பது போன்ற உங்களுடைய பல சந்தேகங்களுக்கு வீடியோ வழியாகவும் தெளிவான விளக்கங்கள் கூறப்பட்டுள்ளது. அந்த வீடியோவை காண விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள Youtube வீடியோவை முழுமையாக பார்க்கவும்.



இந்தப் பதிவு பற்றிய உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள் அனைத்தும் வரவேற்கப்படுகிறது. இந்த பதிவை பற்றிய உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள் கீழே உள்ள Comments Section இல் உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யவும், மீண்டும் ஒரு நல்ல பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.






Previous Post
Next Post