Best AR Augmented Reality Civilization Android App | Experience our Earlier Civilization with AR Technology | Master Mind

Best Augmented Reality Android App:



வணக்கம் நண்பர்களே! இன்றைய பதிவு Augumented Reality பற்றிய ஒரு பதிவு. இந்த பதிவிற்கு முன்னதாகவே இந்த Augumented Reality பற்றியும், இந்த AR தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இரண்டு செயலிகளை பற்றியும் விரிவாக பார்த்துள்ளோம். அந்தப் பதிவை நீங்கள் இன்னும் படிக்கவில்லை எனில் கீழே அந்த பதிவின  இணையதளம் கொடுக்கப்பட்டுள்ளது அதனுள் சென்று அந்த பதிவினை படிக்கவும்.

முதல் பதிவு இந்த Augumented Reality தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு கேம் பற்றிய ஒரு பதிவு. இந்த பதிவில் AR தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்ட கேம் பற்றியும் அந்த கேம் எவ்வாறு விளையாடுவது என்பதை பற்றியும் அந்த கேமை எப்படி உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்வது என்பது பற்றியும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது, எனவே அந்த பதிவை நீங்கள் படிக்க வேண்டுமெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தில் சென்று படிக்கவும்.


இரண்டாவது பதிவு இந்த Augumented Reality (AR) மற்றும் Virtual Reality (VR) ஆகிய இந்த இரண்டு தொழில்நுட்பத்தையும் உள்ளடக்கிய ஒரு செயலியை பற்றியும் இதற்கு முந்தைய பதிவில் விரிவாக பார்த்துள்ளோம் அந்த பதிவை நீங்களும் படிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தின் வழியாக சென்று அதனை படிக்கவும். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய விரும்பினால் அதற்கான இணையமும் இந்தப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.


இப்பொழுது மீண்டும் நமது இன்றைய இந்த பதிவின் உள் செல்வோம். இப்பொழுது உள்ள காலகட்டத்தில் அறிவியல் என்பது மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளது. தினமும் ஒரு புது வித தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் Augumented Reality எனும் தொழில்நுட்பம் முந்தைய காலகட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும், அதனைப் பற்றிய தெளிவான விவரம் பலருக்கு இன்றளவும் சென்றடையவில்லை. 

AR Technology :

இன்னும் பலர் இந்த AR  Technology என்ன என்பது கூட தெரியாமல் இருக்கின்றனர். எனவே இந்தத் தொழில்நுட்பம் என்ன என்பதை பற்றி தெரியாத சிலருக்காக இதைப்பற்றி ஒரு சிறிய விளக்கம் பார்ப்போம்.

இந்த AR தொழில்நுட்பம் என்பது நம் கண் முன் இல்லாத ஒரு பொருள் அங்கு இருந்தால் எப்படி இருக்கும் என்பதை காட்டும் ஒரு தொழில்நுட்பம் தான் இந்த Augumented Reality எனும் இந்த தொழில்நுட்பம்.

இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் பல பயன்பாடு நடைமுறையில் இருந்து வருகின்றன. ஆனால் இந்தியாவில் இந்த தொழில்நுட்பம் என்பது பெரிய அளவில் பயன்படுத்துவது இல்லை. அதற்கு காரணம் இந்தியாவில் இந்த தொழில்நுட்பத்தை பற்றிய தெளிவான விவரம் பலருக்கு தெரியாது என்பது தான்.

இப்படி பாட்ட இந்த தொழில்நுட்பம் எப்படி இருக்கும் அது எப்படி உபயோகப்படுத்துவது என்பது போன்ற உங்களுடைய பல கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விடை ஆகவே இந்த ஒரு பதிவு இருக்க போகிறது.

இந்த தொழில்நுட்பம் பயன் படுத்தி பல நிறுவனங்கள் பல செயலியை உருவாக்கியுள்ளனர். அந்த செயலிகளை நமது மொபைலில் பதிவரக்கம் செய்துகொண்டு நாம் அந்து தொழில்நுட்பத்தை நமது மொபைலில் பார்க்கமுடியும்.

அப்படி இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான செயலியை பற்றியே விரிவாக இந்த பதிவில் நாம் காணவிருக்கிறோம் அந்த செயலியை எவ்வாறு பயன்படுத்துவது அந்த செயலியை எப்படி உங்களது மொபைலில் நீங்கள் பதிவிறக்கம் செய்வது என்பது போன்ற பல விஷயங்கள் இந்த பதிவில் பார்க்க விருக்கிறோம்.

Civilization AR App:

இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு செயலி, இன்று இந்த பதிவு நாம் காணவிருக்கும் இந்த செயலியின் பெயர் Civilization AR. இந்த செயலி உபயோகப்படுத்தி பழஙகால வாழ்வியலில் ஒவ்வொரு நாட்டிலும் உபயோக படுததிய பொருட்கள் அனைத்தையும் நம் கண்முன் பிம்பமாக இந்த செயலி பயன்படுத்தி கண்்முன் கொண்டு வந்து உங்கள்் மொபைல் வழியாக அதனை பார்க்க முடியும்.

இந்த Civilization AR செயலியை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தை கிளிக் செய்யவும்.

App Downloading Link


இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்த பிறகு உங்களது மொபைலில் இதனை ஓபன் செய்தால் அதில் பல பழங்கால பொருட்கள் விலங்குகள் அருங்காட்சியத்தில் உள்ள பொருட்கள் என பல AR தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

அந்தப் புகைப்படங்களை உங்கள் மொபைல் இணைய தளத்தை பயன்படுத்தி உங்கள் கண் முன் உங்க ள் வீடுகளில் நீங்கள் இருக்கும் இடத்தின் முன் ஒரு பிம்பமாக கொண்டுவரமுடியும் அதனை வெறும் கண்களால் பார்க்க முடியாது. உங்களது மொபைல் வழியாக அது உங்கள் கண் முன் இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை உங்களால் உருவாக்கிக் கொள்ள முடியும்.

அப்படி உருவான அந்த பிம்பத்தில் அருகில் நின்று நீங்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் ஆனால் உங்களால் வெறும் கண்களால் வழியாக அந்த பிம்பங்களை பார்க்கமடியாது உங்களது
 மொபைல்போன் வழியாகவே அந்த பிம்பங்களை உங்களால் பார்த்து ரசிக்க முடியும்.

இந்த செயலியில் உங்களுக்கு பல அரிய வகை நீங்கள் பார்த்திராத பழங்கால பொருட்கள், அந்த காலத்தில் வாழ்ந்த விலங்குகள், வருங்காலத்தில் வரவிருக்கும் அறிவியல் தொழில்நுட்பங்கள், தொழில்நுட்பம் சார்ந்த பொருட்கள், இந்த காலகட்டத்தில் இருக்கக் கூடிய பொருட்கள் என அனைத்தும் இந்த செயலியில் உங்களுக்கு AR தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கி கொடுக்கப்பட்டிருக்கும்.

அப்படி கொடுக்கப்பட்டுள்ள அந்த பொருட்கள் அனைத்தையும் உங்கள் கண்முன் ஒரு பிம்பமாக கொண்டு வந்து அதனை உங்கள் மொபைல் போன் வழியாக நீங்கள் பார்த்து ரசிக்க முடியும் உங்கள் கண்முன் இருப்பது போன்ற ஒரு உணர்வை நீங்கள் உணர முடியும்.

மேலும் இந்த செயலியை உபயோகப்படுத்துவது குறித்தும் இந்த செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பன பற்றியும் விரிவாக அறிய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை முழுமையாக பார்க்கவும். இந்த வீடியோவில் உங்களுக்கு இந்த செயலை பற்றிய அனைத்து விவரங்களும் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.


இந்தப் பதிவு பற்றிய உங்களுடைய கருத்துக்கள் விமர்சனங்கள் அனைத்தும் வரவேற்கப்படுகின்றன எனவே இந்த பதிவைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள Comments Section இல் பதிவிடவும்.

Previous Post
Next Post