Letyshop Best Cashback Providing App For Online Shopping | Earn By Shoping | Master Mind

Letyshop the Best App to Earn Money on Online:





வணக்கம் நண்பர்களே! இன்றைய பதிவு ஆன்லைன் வழியாக நீங்கள் பணம் சம்பாதிக்க உதவும் ஒரு பதிவு. அப்படி நீங்கள் ஆன்லைன் வழியாக பணம் சம்பாதிக்க உதவும் ஒரு செயலியை பற்றிய பதிவே இந்த பதிவு. அந்த செயலியை எவ்வாறு உபயோகப்படுத்துவது அந்த செயலை கொண்டு எவ்வாறு நீங்கள் பணம் ஈட்டுவது என்பது பற்றிய பல விரிவான தகவல்கள் இந்த பதிவில் உங்களுக்கு கிடைக்கும்.

இப்பொழுது இருக்கும் உலகம், முழுவதுமாக இணைய உலகமாக மாறிவிட்டது. நம் வாழ்வில் நாம் செய்யும் பல விஷயங்கள் இணையத்தின் வாயிலாகவே செய்து வருகிறோம். 

அந்த வகையில் பொருட்கள் வாங்குவதும் கூட இப்பொழுது கடைகளைத் தேடி சென்று எவரும் வாங்குவதில்லை, மாறாக இணைய வாயிலாக பலர் தங்களுக்கு வேண்டிய பொருட்களை பதிவு செய்து
வாங்க ஆரம்பித்து விட்டனர்.

அதற்கேற்ப இணையத்தின் பயன்பாடு மிகவும் பெருகிவிட்டது, இணையத்தின் வழியாக நீங்கள் பொருட்கள் வாங்குவதற்கான வழிகளும் பல நிறுவனங்கள் நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளனர்.

இணைய வாயிலாக பொருட்களை வாங்கும்பொழுது அதில் பல நன்மைகளும் நமக்கு கிடைக்கின்றன.

இணைய வழியாக நாம் பொருட்கள் வாங்கும் பொழுது அந்த பொருட்களுக்கு பல offers கொடுக்கப்படுகின்றன. Cashback Offer, Coupen Code போன்ற பல வகையில் நமக்கு நாம் வாங்கும் பொருட்களுக்கு ஏற்ப Offers கிடைக்கின்றன.

அதுமட்டுமில்லாமல் நாம் வாங்கும் பொருட்கள் அனைத்தும் நம் வீடு தேடி வந்து நேரடியாக கொடுத்து நம்மிடம் பணம் பெற்ற செல்கிறார்கள் அதனால் நாம் ஒரு பொருளை தேடி அலைந்து வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் ஆகிவிட்டது.

அதுமட்டுமில்லாமல் நாம் வாங்கிய பொருள் நமக்கு பிடிக்கவில்லை என்றாலும் அந்த பொருளில் ஏதேனும் பழுது உள்ளது என்றாலும் அதனை உடனடியாக நாம் திருப்பி அனுப்பிவிட்டு நமது பணத்தை பெற்றுக் கொள்ள முடியும். 

இதுபோன்று பல வசதிகள் நமக்கு இணையவழியில் பொருட்கள் வாங்கும் போது கிடைக்கின்றன. இதன் காரணமாகவே இணையவழியில் பொருட்கள வாங்கும் நடைமுறை தற்போது மிகவும் அதிகரித்துவிட்டது.

அந்த வகையில் இணைய வாயிலாக  நீங்கள் பொருட்களை வாங்கிக் கொண்டேன், நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு ஏற்ப பணம் சம்பாதிக்க உதவும்் ஒரு செயலியை பற்றியே இந்தப் பதிவு நாம் காணவிருக்கிறோம்.

Letyshop:

இணைய வழியாக நீங்கள் வாங்கும் அல்லது உங்களுக்கு தெரிந்த வேறு நண்பர்களுக்காக நீங்கள் வாங்கும் பொருட்களில் மூலம் நீங்கள் சம்பாதிக்க உதவும் இந்த செயலியின் பெயர் Letyshop.

Letyshop எனும் இந்த ஒரு செயலியை பயன்படுத்தியே நாம் இணைய வாயிலாக பொருட்கள் வாங்கும் பொழுது அந்தப் பொருளுக்கு ஏற்ப Cashback பெற்றுக்கொள்ளமுடியும்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த ஆண்ட்ராய்ட் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

இந்த செயலியை பதிவிறக்கம் செய்தபிறகு உங்களது E-Mail ID வாயிலாக பதிவு செய்து உள்ளே நுழையவும். இந்த செயலியின் முதல் பக்கத்தில் உங்களுக்கு Flipkart, Mytra போன்ற பல இணையவழி பொருட்கள் விற்கும் இணையதளங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்த இணையதளங்கள் எதில் சென்று உங்களுக்கு வேண்டிய பொருட்கள் வாங்கினாலும் அந்த பொருட்களுக்கு ஏற்ப Cashback உங்களது Letyshop ஆண்ட்ராய்டு செயலியில் வந்து சேரும். அதனை உங்களது bank details கொடுத்து உங்கள் bank account மாற்றி கொள்ள முடியும்.

இந்த செயலில் உங்களுக்கான பொருட்கள் மட்டுமல்லாது உங்களுக்கு தெரிந்த வேறு நண்பர்களுக்கும் இதன் மூலமாக நீங்கள் பொருள்கள் வாங்கி தரும்பொழுது அதனுடைய Cashback உங்களுக்கு வந்து சேரும் இதன் மூலமும் நீங்கள் பணம் ஈட்டலாம்.

அப்படி உங்களுக்கு இந்த Letyshop App இல் சேரும் பணத்தை உங்களது வங்கி கணக்கிற்கு மாற்றுவதும் மிகவும் எளிமையான ஒன்றே. நேரடியாக உங்களது வங்கிக் கணக்கு விவரங்களை இந்த செயலியில் கொடுத்து அந்த பணத்தை உங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றி கொள்ள முடியும்.

இந்த செய்தியிலிருந்து உங்களது வங்கி கணக்கிற்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 15,000 ரூபாய் வரை நீங்கள் உங்களது வங்கி கணக்கிற்கு மாற்றி.

நீங்கள் இணையம் வாயிலாக வாங்கும் எந்த ஒரு பொருளையும் இந்த செயலி வழியில் சென்று வாங்கினால் இது போன்ற பல நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் இந்த செயலியை பற்றின முழுவிவரத்தையும் அறிய இந்த செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது இந்த செயலியில் எவ்வாறு இணைய வழியாக பொருட்கள் வாங்குவது அதன் மூலம் எவ்வாறு பணம் ஈட்டுவது என்பது பற்றிய முழு விவரங்களையும் வீடியோ வழியாக காண விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை முழுமையாக பார்க்கவும்.


இந்த பதிவு பற்றிய உங்களுடைய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன எனவே இந்த பதிவு பற்றிய உங்களுடைய கருத்துக்கள் கேள்விகள் எதுவாக இருந்தாலும் கீழே குறிப்பிடவும்.


Previous Post
Next Post