How To Create a Animation Cartoon Story in Mobile | Clilk Best Best Cartoon Story Making App

How To Create Animation Cartoon Story in Mobile




வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நாம் காணவிருப்பது உங்களது மொபைலில் எளிமையாக எவ்வாறு அணிமேஷன் கார்ட்டூன் கதைகள் உருவாக்குவது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் காணவிருக்கிறோம்.

இந்த பதிவில் நாம் காணவிருக்கும் இந்த கார்ட்டூன் அனிமேஷன் என்பது கதாபாத்திரங்கள் அசைந்து கொடுத்து உருவாக்கும் அனிமேஷன் வீடியோ இல்லை.

நாம் உருவாக்க போகும் இந்த அனிமேஷன் கார்ட்டூன் கதைகளில் எந்த ஒரு கதாபாத்திரமும் அசையாது. இது நாம் தினசரி நாளிதழ்களில் கதைகள் படித்து இருப்போம். அந்த நாளிதழ்களில் வரும் கதைகளை வீடியோ வடிவில் உருவாக்க உதவும் ஒரு செயலி இது.

அந்த கதாபாத்திரங்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு உங்களால் இடமாற்றம் செய்ய முடியும் ஆனால் அந்த கதாபாத்திரத்தில் எந்த ஒரு அசைவும் இல்லாமல் கதாபாத்திரம் எப்படி இருந்ததோ அதை அப்படியே இன்னொரு இடத்திற்கு உங்களால் பயணிக்க வைக்க முடியும்.

அப்படிப்பட்ட அனிமேஷன் கொண்டு கார்ட்டூன் கதைகளை உருவாக்க உதவும் ஒரு ஆண்ட்ராய்டு செயலியை பற்றியும் அதன் செயல்கள் குறித்தும் விரிவாக இந்த பதிவில் காணவிருக்கிறோம்.

இது முழுக்க முழுக்க பத்திரிக்கையில் வரும் கதைகளை நீங்கள் அனைவரும் படித்திருப்பீர்கள், அந்த கதைகளில் எவ்வாறு பல புகைப்படங்கள் வைத்து  அந்த புகைப்படம் என்ன கூற வருகிறது என்பதை பற்றிய ஒரு விரிவாக்கம் இருக்குமோ, அதுபோன்ற ஒரு கார்ட்டூன் கதைகளை உங்களால் இந்த செயலி கொண்டு உருவாக்க முடியும்.

அதேபோல் இந்த செயலியில் உள்ள கதாபாத்திரங்கள்   zoom in மற்றும் zoom out  ஆவது போன்ற அணிமேஷன் உங்களால் இந்த செயலி கொண்டு உருவாக்கிக் கொள்ள முடியும்.

அப்படி தினப் பத்திரிகைகளில் வரும் கதைகளை போன்ற ஒரு அனிமேஷன் கார்ட்டூன் கதைகளை உருவாக்கும் செயலியை பற்றியும் அதில் எவ்வாறு கார்ட்டூன் கதைகளை நீங்கள் உருவாக்க முடியும் என்பதை பற்றி விரிவாக தொடர்ந்து காண்போம்.

அதே போன்று இந்த செயலியில் உங்களுக்கு பல கார்ட்டூன் கதாபத்திரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த கதாபாத்திரங்களை வைத்து உங்களின் கார்ட்டூன் கதைகளை நீங்கள் உருவாக்கிக் கொள்ள முடியும்.

அந்த செயலியில் கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்கள் மட்டுமல்லாது உங்களது புகைப்படங்கள், உங்களது கதாபாத்திரங்களையும் நீங்கள் இதில் பதிவிறக்கம் செய்துகொண்டு அதை வைத்து கார்ட்டூன் கதைகளை உருவாக்கிக் கொள்ள முடியும்.

CLILK:

இவ்வாறு பத்திரிகையில் வரும் கார்ட்டூன் கதைகளை வீடியோவாக குழந்தைகளுக்கு பிடித்தவாறு எடிட் செய்ய உதவும் இந்த செயலியின் Click.

இந்த செயலி உங்களுக்கு Google Play Store இல் உள்ளது எனவே உங்கள் மொபைலில் உள்ள Google Play Store சென்று அதில் click என search செய்தால் உங்களுக்கு இந்த செயலி கிடைக்கும் அதனை பதிவிறக்கம் செய்து கொண்டு நீங்கள் கீழே கூறப்பட்டுள்ளதை போல எடிட்டிங்கை தொடரமுடியும்.

இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் இந்த செயலியின் இணையதளம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது அதனை கிளிக் செய்தும் நீங்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


இந்த செயலியில் கார்ட்டூன் கதைகளை உருவாக்க உங்களுக்காக பல கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதில் குழந்தைகளை கவரும் வகையில் திரைப்படங்களில் உள்ள கதாபாத்திரங்கள், கார்ட்டூன் கதைகளில் உள்ள கதாபாத்திரங்கள் என அனைத்து பிரபலமான கார்ட்டூன் கதாபாத்திரங்களை உங்களுக்கு இந்த செயலியில் கொடுக்கப்பட்டிருக்கும்.

அந்த கதாபாத்திரங்களை கொண்டு உங்களால் இதில் சிறந்த கார்ட்டூன் கதையை உருவாக்கிக் கொள்ள முடியும்.

மேலும் இந்த செயலில் உங்களது அந்த கதாபாத்திரத்திற்கு உரிய அணிமேஷன் வேண்டும் என்று விரும்பினால் அதையும் இந்த செயலில் உங்களால் கொடுக்க முடியும்.

ஆனால் நான் முன்னரே சொன்னது போல உங்களால் அந்த கதாபாத்திரங்களை உயிருள்ள கதாபாத்திரங்கள் போன்று அசைய வைக்க முடியாது. அந்த கதாபாத்திரங்களை ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு மாற்ற முடியும் அல்லது அந்த கதாபாத்திரங்களில் zoom in மற்றும் zoom out செய்து கொள்ள முடியும்.

பத்திரிக்கையில் வரும் கதைகளில் அந்த கதாபாத்திரங்கள் கூற வருவதை எழுத்து வடிவில் அந்த கதாபாத்திரத்தின் தலைக்கு அருகில் அந்தக் கதாபாத்திரத்தின் நினைவு போன்று அந்தக் கதாபாத்திரங்கள் கூற வருவதை எழுதி இருப்பார்கள்.

அதேபோன்று இந்த செயலிலும் நீங்கள் உங்களது கதாபாத்திரங்கள் என்ன கூற வருகின்றன என்பதை அந்த கதாபாத்திரங்கள் இப்படியாக நீங்கள் கூற நினைப்பதை எழுத்து வடிவில் எழுதிக்காட்ட முடியும்.

இந்த கதாபாத்திரங்கள் இருக்கும் இடத்தை குறிக்கும் வண்ணம் இதன் background மாற்றிக்கொள்ள முடியும். பள்ளி, பார்க், வீடு, கல்லூரி, காடு என பலவகையான background இந்த செயலியில் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும். அந்த background வைத்து உங்களது கதையை நீங்கள் வடிவமைத்துக் கொள்ள முடியும்.

மேலும் இந்த செயலியை பற்றிய தகவல்கள் மற்றும் இதை எவ்வாறு உபயோகப்படுத்துவதை எவ்வாறு இதில் அனிமேஷன் கார்ட்டூன் கதைகள் உருவாக்குவது என்பதை பற்றியெல்லாம் அறிய விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை முழுமையாக பார்க்கவும்.

Previous Post
Next Post