How to Use Chrome Extension in mobile | Best Android Browser With Chrome Extension Features

Best Android Browser With Chrome Extension Features:


வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நாம் கணினி உபயோகிப்பவர்கள், அவர்கள் கணினியில் உள்ள Chrome மற்றும் Firefox போன்ற பிரவுசர்களில் Chrome Extension எனப்படும் சில பயன்பாடுகளை பதிவிறக்கம்் செய்து அவர்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து உபயோகிப்பதை பார்த்திருப்பீர்கள். 

Chrome Extension எனப்படும் இந்த பயன்பாட்டை உங்களால் மொபைலில் உபயோகப்படுத்த முடியாது இது பிரத்தியேகமாக கணினி உபயோகிப்பவர்கள் மட்டுமே கொண்டுவரப்பட்ட ஒன்று.

மொபைலில் எப்படி நமக்கு வேண்டிய பயன்பாட்டிற்கு ஏற்றவாறு ஒவ்வொரு செயல்களுக்கும் ஒவ்வொரு செயலியை பயன்படுத்தி அந்த செயல்களை செய்கின்றோமோ.

அதேபோன்று கணினி உபயோகிப்பவர்களுக்கு இந்த Chrome Extensions மூலம் அவர்களுக்கு தேவைப்பட்ட செயலிகளை அவர்களது கணினியில் உள்ள பிரவுசர்களில் பதிவிறக்கம் செய்துகொண்டு அந்த செயல்கள் அனைத்தையும் மிகவும் எளிமையாக செய்து கொள்வார்கள்.

ஆனால் ஆண்ட்ராய்ட் மொபைலில் கொடுக்கப்படாத பல சிறப்பான செயல்களும் இந்த Chrome extension கொண்டு பலர் கணினி வழியாக செய்து வருகின்றனர். 

இப்படிப்பட்ட உபயோகம் கொண்ட இந்த Chrome Extension மொபைலில் பயன்படுத்த முடிந்தால் நமக்கு தேவையான சிறு சிறு விஷயங்களுக்கு செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.

நமது Chrome பிரவுசரில் இந்த Extensions உபயோகப்படுத்தி உங்களுக்கு வேண்டிய அனைத்து செய்துகொள்ளும் வகையில் உபயோகப்படுத்திக் கொள்ள முடியும்.

எனவே அப்படி உங்கள் மொபைலில் இந்த Chrome extension பயன்படுத்துவதற்காகவே சில பிரவுசர்கள் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளன. அப்படி உருவாக்கப்பட்ட பிரவுசர்களில் ஒரு சிறந்த பிரவுசரை இந்த Chrome extension பயன்பாடு மட்டுமின்றி இன்னும் பல பயன்பாட்டினை கொண்டிருக்கும் ஒரு பிரவுசர் பற்றியே இந்த பதிவில் நாம் காணவிருக்கிறோம்.

Yantex Browser:

கணினி உபயோகப்படுத்தும் நண்பர்கள் அவர்கள் கணினியில் பயன்படுத்தும் இந்த Chrome extension உங்களது ஆண்ட்ராய்டு மொபைலிலும் பயன்படுத்த உதவும் அந்த பிரவுசரின் பெயர் yantex Browser.

இந்த Yantex Browser உபயோகப்படுத்தி உங்களால் கணினிகளில் பயன்படுத்தும் Chrome Extension ஐ மொபைலிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த செயலி உங்களுக்கு Play Store இல் உள்ளது எனவே உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள Google Play Store இல் சென்று Yantex Browser என search செய்து உங்களால் இந்த பிரவுசர் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்
இந்த பக்கத்தில் இருந்து நேரடியாக இந்த பிரவுசரை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ளது அந்த இணையத்தை கிளிக் செய்தும் பதிவிறக்கம் செய்துகள்ளலாம்.


இந்த செயலியை உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்தபிறகு அதனை ஓபன் செய்து அந்த பிரவுசர் வழியாக chrome extension என search செய்து. அந்த extension store இல் உள்ள அனைத்து extension ஐயும் உங்களது மொபைலில் உபயோக படுத்தி கொள்ள முடியும்.

தற்போது இந்த extension எப்படி பதிவிறக்கம் செய்வது அதனை எவ்வாறு இந்த பிரவுசரில் பயன்படுத்துவது என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.

Chrome extension store இல் உங்களுக்கு வேண்டிய extension ஐ தேர்வு செய்து அதனை பதிவிறக்கம் செய்யவும். பதிவிறக்கம் செய்தபிறகு உங்கள் பிரவுசரில் கீழே 3 dot button கொடுக்கப்பட்டிருக்கும் அதனை கிளிக் செய்தால் சில options உங்களுக்கு pop-up ஆகி வரும். 

அப்படி pop-up ஆகிவந்த அந்த option இல் extension இன்னும் ஒரு option இருக்கும். அந்த extension option ஐ ஓபன் செய்தல் நீங்கள் chorome extension store இல் பதிவிறக்கம் செய்த அந்த extension உங்களுக்கு இங்கு காண்பிக்கும்.

அந்த extension ஐ கிளிக் செய்து இந்த Yantex browser இல் அதனை பயன்படுத்திக் கொள்ள முடியும். இதுபோன்று உங்களுக்கு வேண்டிய எத்தனை chrome extension வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து இந்த பிரவுசர் உதவியுடன் நீங்கள் அதனை பயன்படுத்தலாம்.

மேலும் இந்த Yantex browser ஐ எவ்வாறு பதிவிறக்கம் செய்வது மற்றும் இந்த பிரவுசரில் எவ்வாறு chrome extension என்பது குறித்த விரிவான விளக்கங்களை வீடியோவாக காண விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை முழுமையாக பார்க்கவும் .


உங்களுடைய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன எனவே இந்த பதிவைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை கீழே குறிப்பிடவும்.

Previous Post
Next Post