How to Set Video as Ringtone in Android Smartphone | Android Tips and Tricks | Master Mind

 How to Set Video as Ringtone in Android Smartphone:


வணக்கம் நண்பர்களே! இந்தப் பதிவில் நான் உங்களுக்காக கொண்டு வந்திருக்கும் இந்த செயலி சற்று வித்தியாசமான செயலி. இந்த செயலி பயன்படுத்தி உங்களால் உங்கள் மொபைலில் வீடியோக்களை Ringtones ஆக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Useage of App:

நீங்கள் உங்கள் மொபைலில் Ringtone ஆக எதை வைத்துள்ளீர்கள். உங்களுக்கு பிடித்த உங்களுக்கு விருப்பமான திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மற்றும் உங்களுக்கு விருப்பமான இசையை உங்கள் மொபைலில் Ringtone ஆக வைத்துள்ளீர்களா, அல்லது உங்களது voice மற்றும் உங்களுக்கு விருப்பமானவர்கள் Voice-ஐ Record செய்து அதனை உங்கள் மொபைல் Ringtone ஆக வைத்துள்ளீர்களா.

இவ்வாறு Songs, Musics and  Voice Recorders-ஐ எல்லோரும் போன்று நீங்களும் Ringtone ஆக பயன்படுத்துகிறீர்கள் என்றால் நீங்கள் மற்றவர்களைப் போன்று இல்லாமல் தனித்தன்மையுடன் உங்கள் மொபைலில் உள்ள வீடியோக்களை அல்லது உங்களுக்கு விருப்பமான ஏதேனும் வீடியோவை உங்கள் மொபைல் Ringtone ஆக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

 அப்படி உங்கள் மொபைலில் உங்களுக்கு பிடித்த வீடியோவை Mobile Ringtone ஆக பயன்படுத்திக்கொள்ள உதவப் போகும் ஒரு வித்தியாசமான செயலியை பற்றியே இந்த பதிவில் நாம் காணவிருக்கிறோம். இந்த பதிவில் அந்த செயலியை பற்றியும், அந்த செய்தியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றியும் மேலும் அந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்துகள்ள Downloading Link கொடுக்கப்பட்டுள்ளது.

App Size:

இவ்வாறு உங்கள் மொபைலில் உங்களுக்கு பிடித்தமான வீடியோக்களை Mobile Ringtone ஆக பயன்படுத்திக் கொள்ள உதவும் இந்த செயலின் பெயர் VYNG.  இந்த செயலி உங்களுக்கு PlayStore இல் உள்ளது எனவே உங்கள் மொபைலில் PlayStore இல் சென்று vyng என search செய்து இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். PlayStore இல் உள்ள இந்த Vyng செயலியின் அளவு 23mb மட்டுமே. அல்லது இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய உதவும் இணையத்தை கீழே கொடுத்துள்ளேன். அந்த இணையத்தின் வழி சென்று இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

How To Use:

இந்த Vyng செயலியை எவ்று பதிவிறக்கம் செய்தது என்பதை பற்றி மேலே விரிவாக பார்த்தோம் தற்போது இந்த செயலியை எவ்வாறு பயன்படுத்துவது. இந்த செயலியை பயன்படுத்தி எப்படி நமது மொபைலில் உள்ள வீடியோவை அல்லது நமக்கு பிடித்த வீடியோவை Mobile Ringtone ஆக எப்படி வைப்பது என்பதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.

இந்த செயலியை பதிவிறக்கம் செய்து முதல் முறை உள்ளே நுழையும் போது, உங்களது Facebook account அல்லது Google Account வைத்து Sign in செய்து கொள்ள வேண்டும். 

அப்படி உங்களது ஏதேனும் ஒரு Account வைத்து Sign in செய்து உள்ளே நுழையும் போது உங்களுக்கு சில Permissions enable செய்ய சொல்லி கேட்கும்.

அப்படி கேட்கும் அந்த Permissions அனைத்தும் Enable செய்த பிறகு உங்களால் இந்த செயலியை பயன்படுத்த முடியும்.

permissions:

  • Contact Access Permission
  • Set Default Caller App
  • Permissions to make a Call
  • Permissions to Access your Storage
  • Permissions to Access file manager
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த Permissions அனைத்தும் Enable செய்த பிறகு உங்களால் இந்த செயலியை பயன்படுத்தி வீடியோவை Mobile Ringtone ஆக வைக்க முடியும்.

இந்த செயலியில் கேட்கப்படும் அனைத்து Permissions enable செய்தபிறகு இந்த செயலியை பற்றிய ஒரு சிறிய வீடியோ உங்களுக்கு காண்பிக்கப்படும்.

அந்த வீடியோவில் இந்த செயலியை எவ்வாறு உபயோகிப்பது மற்றும் இந்த செயலியை உபயோகப்படுத்தி உங்களால் என்ன வசதிகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பது பற்றியும் விரிவாக காண்பிக்கப்படும்.

அந்த வீடியோவை பார்த்து நீங்கள் இந்த செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை மிகவும் எளிமையாக அறிந்து கொள்ள முடியும்.

அந்த வீடியோ முடிந்த பிறகு இந்த செயலியில் உள்ள சிறப்பு அம்சங்கள் உங்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாக காண்பிக்கப்படும் அவை அனைத்தையும் பார்த்த பிறகு நீங்கள் செயலியின் உள் நுழையலாம்.

செயலியின் உள் நீங்கள் நுழையும்போதே Incoming மற்றும் Outgoing Call ringtone வைக்குமாறு உங்களை கேட்கும். அப்போது நீங்கள் உங்களுக்கு விருப்பமான வீடியோவை Incoming மற்றும் Outgoing call சேவையின் Ringtone ஐ வைத்துக்கொள்ளலாம்.

தற்போது நீங்கள் Video Ringtone வைக்க விரும்பவில்லை எனில் பின்னர் வைத்துக்கொள்ளவும் முடியும். அதற்கு இந்த செயலியை open செய்தபிறகு இந்த செயலியில் மேலே Inco எனming மற்றும் Outgoing என இரண்டு options கொடுக்கப்பட்டிருக்கும் அதனுள்சென்று  உங்களுக்கு வேண்டிய வீடியோவை நீங்கள் mobile ringtone ஆக அமைத்துக்கொள்ள முடியும்.

அப்படி உங்களுக்கு வேண்டிய வீடியோவை நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொழுது இந்த செயலில் default ஆகவும் சில வீடியோக்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அந்த வீடியோக்களை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று விரும்பினாலும் நீங்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த செயலில் Animation, Devotional, Tamil, Marathi, telungu, tiktok video என்ன பலவகையான வீடியோக்கள் இந்த செயலியில் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும், அதுமட்டுமில்லாமல் உங்கள் செயலில் நீங்கள் பதிவிறக்கம் செய்து வைத்திருக்கும் வீடியோக்களும் உங்களுக்கு காண்பிக்கப்படும். அப்படி காண்பிக்கப்படும் வீடியோக்களில் இருந்து உங்களுக்கு இந்த வீடியோவை உங்களது Mobile Ringtone ஆகவைக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ அந்த வீடியோவை தேர்ந்தெடுத்து உங்களது Mobile Ringtone ஆக வைத்துக் கொள்ள முடியும்

அப்படி நீங்கள் mobile Ringtone ஆக வைக்க விரும்பும் அந்த வீடியோவில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட duration ஐ mobile Ringtone ஆக வைக்க வேண்டும் என்று விரும்பினால், உங்களால் இந்த செயலியில் அந்த வீடியோவை edit செய்துகள்ளும் option உம் கொடுக்கப்பட்டுள்ளது எனவே உங்களுக்கு விருப்பமான அந்த பகுதியை மட்டும் நீங்கள் cut செய்து உங்களது Ringtone ஆக பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இந்த செயலியில் Incoming call மற்றும் Outgoing call சேவைக்கு video ringtone வைப்பது போன்று ஏதேனும் குறிப்பிட்ட நண்பரின் incoming மற்றும் Outgoing Call க்கு நீங்கள் தனித்துவமான வீடியோவை Ringtone ஆக வைக்க விரும்பினால். உங்கள் மொபைலில் உள்ள அனைத்து Contacts இந்த செயலில் இருக்கும். அந்த contacts ஐ தேர்வு செய்து அதற்கென தனி வீடியோவையும் mobile Ringtone ஆக வைத்துக்கொள்ள முடியும்.

இவ்வாறு உங்களுக்கு விருப்பமான வீடியோவை உங்கள் Mobile Ringtone ஆக வைக்க உதவும் இந்த Vyng செயலியை பதிவிறக்கம் செய்ய கீழே Downloading Link என ஒரு இணையதளம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை கிலிக் செய்து நீங்கள் இந்த Vyng செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

DOWNLOADING LINK


இந்தப் பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என நான் நம்புகிறேன் அப்படி இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்தது எனில் நமது இந்த இணையதள பக்கத்திற்கு உங்களது ஆதரவை கொடுங்கள் மேலும் இந்தப் பதிவைப் பற்றிய உங்களுடைய கருத்துக்கள் அனைத்தும் வரவேற்கப்படுகின்றன எனவே உங்களுடைய கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அதனை கீழே குறிப்பிடவும்.








Previous Post
Next Post