[Tamil] Top 5 Best Android Mobile Apps in 2021 | Mobile Customisation Apps | Master Mind

5 BEST ANDROID MOBILE APPS 2021:


வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நான் உங்களுக்காக இந்த 2021 ஆம் ஆண்டின் சிறந்த 5 Android Apps கொண்டு வந்துள்ளேன்.

இதில் நான் உங்களுக்காக கொண்டு வந்துள்ள இந்த 5 Android Apps உம் உங்களது Android Mobile Phone ஐ அழகாகவும், எளிமையாகவும் உபயோகிக்கும் வகையில் உங்களது Android Mobile Phone ஐ Customize செய்ய உதவும் 5 Android Apps பற்றியே இந்த பதிவில் நாம் கானவிருக்கிரோம்.

நான் உங்களுக்காக கொண்டுவந்துள்ள இந்த 5 Android Apps உம் நான் எனது mobile phone இல் உபயோகப்படுத்தி பார்த்து, இந்த Apps இன் செயலோட்டிலும், பாதுகாப்பிலும் எந்தவித பிரச்சனைகளும் இல்லை என்று உறுதிப்படுத்திய பிறகே இந்த செயலிகளை உங்களுக்காக கொண்டு வந்துள்ளேன்.

எனவே இந்த 5 Android Apps இன் செயல்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்து எவ்வித கவலையும் இல்லாமல் உங்களது Android Mobile இல் இந்த செயலிகளை பயன்படுத்தலாம்.


List of Apps:
  • Ratio Lancher
  • Liquid Teardown
  • Who Touched my Phone
  • WallP
  • Rolling icon
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த 5 Android Apps பயன்பாடுகள் பற்றி வீடியோவாக கான விரும்பினால், இந்த பதிவின் இறுதியில் இந்த 5 Android Apps செயல்பாடுகள் பற்றி விரிவான விளக்கத்துடன் Video கொடுக்கப்பட்டுள்ளது.

1. RATIO LANCHER:

ஒவ்வொரு mobile brand's உம் அவர் அவர் brands mobile க்கு ஏற்றவாறு lanchers கொடுத்திருப்பார்கள். ஆனால் அப்படி கொடுக்கப்பட்டுள்ள அனைத்து lancher களிலும் home page இல் பெரிய அளவில் எவ்வித மாற்றமும் இருக்காது.

அனைத்து mobile default lancher களிளும் home page இல் Time, Google Search and Apps கொடுக்கப்பட்டிருக்கும். அப்படி கொடுக்கப்பட்டிருக்கும் இந்த home page style ஐ மிகவும் எளிமையாக நிறைய apps இல்லாமல் சில folders மட்டும் இருக்குமாறு customize செய்துகொள்ள உதவும் ஒரு launcher தான் இந்த ratio lancher.

இந்த lancher இல் folders அனைத்தும் நமக்கு ஏற்றவாறு நமக்கு வேண்டிய பெயர்களில் நாம் create செய்துகொள்ள முடியும். அப்படி நாம் create செய்யும் அந்த folder களில் நமக்கு தேவையான apps ஐ வைத்துக்கொள்ள முடியும்.

நாம் இந்த launcher இல் உருவாக்கும் folders அனைத்தும் files வடிவில் இல்லாமல் நாம் உருவாக்கும் பெயர் அப்படியே home page இல் காட்டும்.அப்படி காட்டும் அந்த folder பெயரை click செய்தாள் நமக்கு அந்த folder இல் உள்ள அனைத்து Apps உம் காண்பிக்கப்படும்.

இந்த Ratio Lancher இல் கொடுக்கப்பட்டிருக்கும் color combination உம் மிகவும் சிறப்பாக இருக்கும். மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தின் combination இல் உள்ள இந்த lancher ஐ உபயோகிப்பதற்கு அருமையாக இஇருக்கும்.

இந்த Ratio Lancher ஐநீங்கள் உங்கள் மொபைல் போனில்  பதிவிறக்கம் செய்ய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தின் உள் சென்று அந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.


2. Liquid Teardown:

இந்த செயலி உங்களது மொபைல் போனின் Charging indication Animation மாற்றி அமைத்துக் கொள்ள உதவும் ஒரு செயலி.

தற்போது வரும் பலம் மொபைல் போன்களில், மொபைல் பயன்படுத்துபவர்களை கவரும் வகையில் Charging indication Animation ஒவ்வொரு மொபைல்களுக்கும் மாறுபட்டு விதவிதமாக கொடுக்கின்றனர்.

ஆனால் பழைய மொபைல்கள் உபயோகப்படுத்தும் நண்பர்கள் பலருக்கு இந்த Charging indication Animation என்பது சாதாரணமாக அனைத்து மொபைல்களிலும் இருப்பது போன்று ஒரே மாதிரியாகவே இருக்கும்.

அப்படி உங்கள் மொபைலில் இருக்கும் Charging indication Animation உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை மாற்ற வேண்டும் என்று விரும்பினால் இந்த செயலி அதை மாற்ற உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

இந்த செயலியில் liquid form அசைந்து கொடுக்கும் வகையில் Animation கொடுக்கப்பட்டிருக்கும். உங்கள் மொபைலை Charge போட்ட பிறகு அதில் liquid form இல் அந்த அனிமேஷன் தோன்றும் அந்த அனிமேஷன், உங்கள் மொபைலை நீங்கள் எடுக்கும் பொழுது அசைக்கும் பொழுது அந்த அசைவுக்கு ஏற்றவாறு liquid form அசைந்து கொடுக்கும்.

இந்த Liquid Teardown App உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.


3. Who Touched My Phone:

தற்போது இருக்கும் அறிவியல் தொழில்நுட்பங்களில் மொபைல் போன் என்பது வெறும் தொலைத்தொடர்புகாக மட்டும் உபயோகப்படுத்தும்
ஒரு தொழில்நுட்பமாக இல்லை.

Mobile Phone Smartphone ஆக மாறி தொழில்நுட்பம் நிலை பற்றி தெரிந்து வைத்திருக்கிறது. தேவையில்லை உங்கள் கையில் இருக்கும் உங்களது Smartphone மட்டுமே போதும்.

உங்கள் Smartphone இல் இருந்து உங்களைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடியும், மேலும் உங்களது Smartphone மூலம் உங்களைப் பற்றிய தகவல்கள் மட்டுமல்லாது உங்களது நண்பர்களின் பல தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும். 

இவ்வாறு நாம் உபயோகிக்கும் இந்த Smartphones நம்மை பற்றிய அனைத்து தகவல்களையும் சேகரித்து வைத்திருக்கிறது. அப்படி உங்களது மொபைல் போனில் இருக்கும் உங்களைப்பற்றிய மற்றும் உங்களது நண்பர்களைப் பற்றிய பாதுகாக்கப்பட வேண்டிய தகவல்கள் மற்றவர்கள் கையில் கிடைக்காமல் இருக்க வேண்டுமெனில் உங்களது மொபைலை கண்காணிக்க இதுபோன்ற ஒரு செயலை உங்களது மொபைல் போனில் இருக்க வேண்டியது அவசியம்.

இந்த செயலி உங்களது மொபைல் போனை உங்கள் அனுமதி இன்றி யாரேனும் எடுத்து உங்களது mobile pattern or password தவறாக போட்டாள் அவர்களது புகைப்படத்தை இந்த who Touched my phone செயலி எடுத்து வைத்துக் கொள்ளும் பின்பு நீங்கள் உங்கள் மொபைல் எடுத்து இந்த செயலியின் உள் சென்று பார்க்கும் பொழுது உங்கள் அனுமதியின்றி உங்கள் மொபைல் எடுக்க முயன்றவரின் அந்த புகைப்படத்தை உங்களுக்கு காண்பிக்கும்.

இதன்மூலம் உங்களது மொபைலை உங்களின் அனுமதி இன்றி யாரேனும் எடுத்துப் பயன்படுத்த நினைத்தால் அவர்களின் புகைப்படத்தோடு நீங்கள் எளிமையாக அவர்களை கண்டுபிடிக்க முடியும்.

இந்த Who Touched My Phone செயலியை உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்த விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.


4. WallP:

இந்த WallP செயலி உங்களது மொபைல் போனுக்கு ஏற்ற அழகிய பல Ultra HD 4K Wallpapers உள்ளடக்கிய ஒரு செயலி.

இந்த செயலியில் அனைத்து Smartphone model இக்கும் ஏற்றவாறு பல Wallpapers கொடுக்கப்பட்டிருக்கும். அந்த wallpapers அனைத்தும் பல categories ஆக பிரித்து கொடுக்கப்பட்டிருக்கும். 

இந்த செயலியில் உள்ள Categories இல் ஒவ்வொரு மொபைல் போன் model க்கும் ஏற்றவாறு அந்த mobile phone பெயரில் Google Pixel, Samsung, OnePlus, Redmi என ஒவ்வொரு மொபைல் பிராண்ட் இருக்கும் ஒவ்வொரு மொபைல் மாடலுக்கு ஏற்றவாறு பல 4K Ultra HD Wallpapers கொடுக்கப்பட்டிருக்கும்.

Mobile Model Name மட்டும் இல்லாமல் இன்னும் வேறு பல Categories wallpapers கொடுக்கப்பட்டிருக்கும். அதில்

  • Natural
  • Technology
  • Space
  • Galaxy
  • Advantures
  • Abstract
  • Animals
  • Sports
  • Vehicles
மாதிரியான பல Wallpapers கொடுக்கப்பட்டிருக்கும். அப்படி கொடுக்கப்பட்டிருக்கும் அந்த wallpapers அனைத்தும் 4K Ultra HD format இல் கொடுக்கப்பட்டிருக்கும்.

மேலும் இந்த செயலியின் கொடுக்கப் பட்டிருக்கும் அனைத்து wallpapers யும் நீங்கள் customize செய்து கொள்ள முடியும். அப்படி customize செய்ய brightnes, contrast, saturation, crop மாதிரியான tools கொடுக்கப்பட்டிருக்கும். அந்த tools பயன்படுத்தி நீங்கள் உங்கள் wallpapers ஐ Edit செய்துகொள்ளலாம்.

இந்த WallP செயலியை பயன்படுத்த விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையம் வழியாக சென்று இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.


5. Rolling Icon:

இந்த Rolling Icon செயலி உங்களது மொபைல் போனின் தோற்றத்தையே மாற்ற உதவும் ஒரு Mobile Lancher.

இந்த Rolling Icon Launcher பயன்படுத்தினால் உங்கள் மொபைல் home screen இல் உங்களுக்கு வேண்டிய செயலிகள், உங்கள் மொபைலில் உள்ள புகைப்படங்கள் மற்றும் Stickers வைத்துக் கொள்ள முடியும்.

அப்படி உங்கள் மொபைலில் உள்ள புகைப்படங்களை அல்லது செயலிகளை mobile home screen இல் வைத்தபிறகு உங்கள் மொபைலை எந்த திசையில் நீங்களா செய்தாலும் அந்தத் இசைக்கு ஏற்றவாறு home screen இல் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் செயலிகளும் அங்குமிங்குமாய் நகரும்.

இவ்வாறு சற்று வித்தியாசமான home screen உங்கள் மொபைலில் கொடுக்க உதவும் ஒரு செயலி இந்த Rolling Icon.

இந்த செயலியை நீங்கள் உபயோகப்படுத்த விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையம் வழியாக சென்று இந்த செயலியை பதிவிறக்கம் செய்து உபயோகப் படுத்திக் கொள்ளவும்.


இந்தப் பதிவில் நாம் பார்த்த அனைத்து செயல்களும் உங்களது மொபைலை சற்று வித்தியாசமாக நீங்கள் customize செய்து கொள்ள உதவும் செயலிகள். 

எனவே மற்றவர்களைப் போல் அல்லாது சற்று வித்தியாசமாக உங்களது மொபைலை மாற்றி அமைக்க விரும்பினால் இந்த செயலிகளை பயன்படுத்தி உங்கள் மொபைலை customize செய்து கொள்ளவும்.

இந்த செயலிகளை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் இந்த செயலிகளில பயன்களை பற்றி விரிவாக வீடியோவாக காண விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள
 வீடியோவை முழுமையாக பார்க்கவும். 



இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருக்கும் எனில் இந்தப் பதிவைப் பற்றிய உங்களுடைய கருத்துகளை கீழே குறிப்பிடவும் மேலும் இது போன்ற பதிவுகளை உடனுக்குடன் படிக்க இந்த இணையத்தை தொடரவும்.









Previous Post
Next Post